Images
  • World cup
    (படம்: Mladen ANTONOV / AFP)

உலகக் கிண்ணம்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ள குரோஷியா

குரோஷியா 2-1 எனும் கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி, இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

ஆட்டத்தின் 5ஆவது நிமிடத்திலேயே முதல் கோலைப் புகுத்தினார் இங்கிலாந்தின் Kieran Trippier. முதற்பாதி வரை இங்கிலாந்தின் கை ஓங்கியிருந்தது.

68ஆவது நிமிடத்தில் சமன்செய்தது குரோஷியா.

அதையடுத்து, இரு அணிகளும் சமநிலையில் இருந்ததால், கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.

குரொவேஷியர் Mario Mandzukic, கூடுதல் நேரத்தின் 19ஆவது நிமிடத்தில் வெற்றிக்கான கோலைப் புகுத்தினார்.

இம்மாதம் 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, இறுதிச் சுற்றில் குரோஷியா, பிரான்ஸை சந்திக்கும்.

உங்கள் கருத்து

Top