Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உலக அளவில், 68.5 மில்லியன் பேர் இடம்பெயர நேரிட்டுள்ளது..: ஐக்கிய நாட்டு நிறுவனம்

போர், வன்முறை போன்றவை அதற்குக் காரணங்களாக இருக்கக்கூடும் என்று ஐக்கிய நாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -

மியன்மார், சிரியா போன்ற நாடுகளைச் சேர்ந்த 68.5 மில்லியன் மக்கள் தங்களுடைய வீடுகளை விட்டு வெளியேறும் கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

போர், வன்முறை போன்றவை அதற்குக் காரணங்களாக இருக்கக்கூடும் என்று ஐக்கிய நாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுவரை இல்லாத அளவுக்கு, ஆக அதிகமாக, கடந்த ஆண்டு இறுதியில் வீடு இல்லாதோரின் எண்ணிக்கை இருந்திருக்கிறது.

2016ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்க கடந்த ஆண்டு மூன்று மில்லியனுக்கும் அதிகமானோர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

10 ஆண்டுக்கு முன்னர், அந்த எண்ணிக்கை 50 விழுக்காடு குறைவாக இருந்தது என்று அகதிகளுக்கான ஐக்கிய நாட்டு நிறுவன அமைப்பு சொன்னது.

தங்க இடமின்றி இருப்போரின் எண்ணிக்கை தற்போது தாய்லந்தின் மக்கள் தொகைக்குச் சமம்.

கடந்த ஆண்டு மட்டும் 16.2 மில்லியன் பேர் வீடுகளைவிட்டு வெளியேற வேண்டியிருந்தது.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்