Images
  • world covid
    (படம்: Antara Foto/Indrayadi TH/via REUTERS)

மனநலச் சுகாதாரச் சேவைகளை வலுப்படுத்துமாறு நாடுகளைக் கோரும் உலகச் சுகாதார நிறுவனம்

கிருமிப்பரவலின் நீண்டகாலத் தாக்கத்தால், நாடுகள் அவற்றின் மனநலச் சுகாதாரச் சேவைகளை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று உலகச் சுகாதார நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

முடக்கநிலையால் உளவியல் ரீதியாக ஏற்பட்டிருக்கும் தாக்கம், தனிமைப்படுத்திக்கொள்வது போன்றவற்றால், மனநலச் சுகாதார நெருக்கடி நிலை ஏற்பட்டிருப்பதை அது சுட்டியது.

நோய்ப்பரவலால் ஏற்படும் மனநலச் சுகாதாரத் தாக்கம் நீண்டகாலத்துக்குத் தொடரும் என அது எச்சரித்தது.

ஏதோ ஒரு வகையில் அனைவரும் பாதிக்கப்பட்டிருப்பதாக உலகச் சுகாதார நிறுவனம் குறிப்பிட்டது.

வேலையின்மை, நிதி தொடர்பான கவலைகள், மற்றவர்களிடம் இருந்து பிரிந்திருப்பது போன்றவை மனநலச் சுகாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக அது கூறியது.

-AFP/gs

Top