Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உலக அளவில் COVID-19 கொள்ளை நோய் வேகமாகப் பரவி வருகிறது: உலகச் சுகாதார நிறுவனம்

உலக அளவில் COVID-19 கொள்ளை நோய் வேகமாகப் பரவி வருவதாக உலகச் சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. 

வாசிப்புநேரம் -
உலக அளவில் COVID-19 கொள்ளை நோய் வேகமாகப் பரவி வருகிறது: உலகச் சுகாதார நிறுவனம்

படம்: Christopher Black/World Health Organization/AFP

உலக அளவில் COVID-19 கொள்ளை நோய் வேகமாகப் பரவி வருவதாக உலகச் சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

உலகில் இதுவரை 300,000க்கும் அதிகமானோர் கிருமித்தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.

சுமார் 15,000 பேர் உயிரிழந்தனர். COVID-19 கிருமி, கிட்டத்தட்ட உலகின் எல்லா நாடுகளிலும் பரவி இருக்கிறது.

நிலைமை இன்னும் மோசமடைந்தாலும், இந்த நெருக்கடியைச் சமாளித்து விட முடியும் என்று உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் ஜிப்ரியிஸஸ் (Tedros Ghebreyesus) கூறினார்.

உலகில் முதன் முதலில் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டதும், 100,000 பேர் பாதிப்படைய சுமார் 67 நாள்கள் ஆனது. அடுத்த 11 நாள்களில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 200,000-ஐத் தொட்டது.

அதற்கடுத்த நான்கு நாள்களில் 300,000 பேர் பாதிக்கப்பட்டனர். எனவே கொள்ளை நோய் வேகமாகப் பரவி வருகிறது என்று டாக்டர் டெட்ரோஸ் கூறினார்.

சுகாதாரப் பராமரிப்புக்குத் தேவையான பாதுகாப்பு மருத்துவச் சாதனங்களின் உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்று G 20 நாடுகளை அவர் கேட்டுக்கொண்டார்.

உலக அளவில் சுகாதாரப் பணியாளர்கள் பலர் பாதிக்கப்பட்டிருப்பதைச் சுட்டிய அவர், கிருமித்தொற்றுக்கு சிகிச்சை வழங்கும் முதல்அணி ஊழியர்களின் எண்ணிக்கையை அதிரிக்க வேண்டும் என்றார்.

சுகாதாரப் பணியாளர்களைப் பாதுகாக்கத் தவறினால், உரிய சிகிச்சை கிடைக்காமல், கிருமித்தொற்றுக்கு ஆளான பலர் உயிரிழக்க நேரிடும் என்றும் டாக்டர் டெட்ரோஸ் எச்சரித்தார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்