Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பிரான்ஸ் தேவாலயத்தில் தாக்குதல்- உலகத் தலைவர்கள் கண்டனம்

பிரான்சின் நீஸ் நகரில் உள்ள Notre Dame தேவாலயத்தில் நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதலுக்கு உலகத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

வாசிப்புநேரம் -
பிரான்ஸ் தேவாலயத்தில் தாக்குதல்- உலகத் தலைவர்கள் கண்டனம்

கோப்புப்படம்: AFP

பிரான்சின் நீஸ் நகரில் உள்ள Notre Dame தேவாலயத்தில் நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதலுக்கு உலகத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர்.

" பிரான்ஸ் மக்களுக்கு எங்கள் ஆதரவு உண்டு, பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்கா பிரான்சுக்குத் துணையிருக்கும்" என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் Twitter மூலம் தெரிவித்தார்.

பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் பிரான்சுடன் இந்தியா துணையிருக்கும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குரல் கொடுத்தார்.

பிரான்சுக்கு எதிராகக் கருத்துகள் தெரிவித்து வந்த துருக்கியும் தாக்குதலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், ஈரான், எகிப்து, கத்தார், லெபனான் உட்பட பல நாட்டுத் தலைவர்கள் மட்டுமல்லர், உலக அமைப்புகளும் தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ளன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்