Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

இலங்கை குண்டுவெடிப்பு: உலகத் தலைவர்கள் கண்டனம்

உலகத் தலைவர்கள் பலரும் இலங்கை குண்டுவெடிப்புச் சம்பவங்களின் தொடர்பில் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்த் துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம், இலங்கைத் தாக்குதல்கள் மானுடத்துக்கு எதிரானவை என்று சாடியுள்ளார்.

சிங்கப்பூர் சுற்றுப்புற நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி, ஈஸ்ட்டர் தினத்தில் மேற்கொள்ளப்பட்ட இலங்கைத் தாக்குதல்களில் அப்பாவி மக்கள் பலியானது குறித்து ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார்.

அத்தகைய பயங்கரவாதச் செயல்களைக் கண்டிப்பதில், இலங்கையுடன் சிங்கப்பூர் ஒன்றுபட்டிருப்பதாக அமைச்சர் கூறினார்.

தாக்குதல்களுக்குக் கண்டனம் தெரிவித்த மலேசிய வெளியுறவு அமைச்சு, தாக்குதலுக்குக் காரணமானவர்களை விரைந்து நீதிக்கு முன் நிறுத்தவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, வட்டாரத்தில் அத்தகைய காட்டுமிராண்டித் தனமான செயலுக்கு இடமில்லை என்று சாடியுள்ளார்.

இந்தத் துயரமான நேரத்தில், இலங்கை மக்களுடன் இந்தியா ஒன்றுபட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மே, அந்தத் தாக்குதல்கள் மிரள வைப்பதாகக் கூறியுள்ளார்.

நியூசிலந்துப் பிரதமர் ஜசிண்டா ஆர்டன், அவற்றைப் பேரழிவுச் சம்பவங்கள் என்று வருணித்துள்ளார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்