Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

லெபனானுக்கு உதவும் உலக நாடுகள்

லெபனானுக்கு உதவும் உலக நாடுகள்

வாசிப்புநேரம் -

லெபனானுக்கு உதவ பல உலக நாடுகள் முன்வந்துள்ளன.

குவைத், பிரான்ஸ், கிரீஸ், கத்தார், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் உதவிகளை அனுப்பி வருகின்றன.

அவை மருத்துவப் பொருள்கள், ரொக்க உதவி ஆகியவற்றுடன் மீட்புக் குழுக்களையும் அனுப்பியுள்ளனன.

ஏற்கெனவே பொருளியலிலும் COVID-19 நோய்த்தொற்றாலும் அடிவாங்கியுள்ள லெபனானுக்கு இது சற்று ஆறுதலான செய்தியாக அமைந்துள்ளது.

கத்தார், தற்காலிக மருத்துவமனைகளை அமைப்பதற்குத் தேவையான சாதனங்களை அனுப்பியுள்ளது.

நூற்றுக்கணக்கான படுக்கைகளும் விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.

குவைத்தும் மருத்துவப் பொருள்களை வழங்கியுள்ளது.

கிரீஸ் ராணுவ விமானங்கள் மூலம் மீட்புப் பணியாளர்களை பெய்ரூட்டிற்கு அனுப்பியது.

அல்ஜீரியாவும் பிரான்ஸும் கப்பல் மூலமாகவும் ராணுவ விமானங்கள் மூலமாகவும் அவசர உதவிப் பொருள்கள், மருத்துவக் குழுக்கள், தீயணைப்புக் குழுக்கள் மற்றும் கட்டுமானப் பொருள்களை அனுப்பியுள்ளன.

மேலும் சில ஐரோப்பிய நாடுகள் லெபனானுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளன.

பெய்ரூட்டில் நேற்று முன்தினம் நேர்ந்த இரண்டு பெரிய வெடிப்புகளில் 137 பேர் மாண்டனர். மேலும் 5,000 பேர் காயமடைந்தனர்.

சம்பவத்தால் சுமார் 300,000 பேர் வீடுகளை இழந்து தற்காலிகத் தங்குமிடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்