Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

நம்பகத்தன்மையான செய்திகளை வழங்க செய்தியாளர்கள் ஆற்றும் முக்கியமான பங்கை நினைவுபடுத்தும் அனைத்துலகச் செய்தி தினம்

இன்று அனைத்துலகச் செய்தி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய தினம், நம்பகத்தன்மையான செய்திகளை வழங்க செய்தியாளர்கள் ஆற்றும் முக்கியமான பங்கு குறித்த விழிப்புணர்வைப் பொதுமக்களிடையே ஏற்படுத்த முயல்கிறது. 

வாசிப்புநேரம் -
நம்பகத்தன்மையான செய்திகளை வழங்க செய்தியாளர்கள் ஆற்றும் முக்கியமான பங்கை நினைவுபடுத்தும் அனைத்துலகச் செய்தி தினம்

படம்: Pixabay

இன்று அனைத்துலகச் செய்தி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய தினம், நம்பகத்தன்மையான செய்திகளை வழங்க செய்தியாளர்கள் ஆற்றும் முக்கியமான பங்கு குறித்த விழிப்புணர்வைப் பொதுமக்களிடையே ஏற்படுத்த முயல்கிறது.

மக்கள் அந்தச் செய்திகள் மூலம், வேகமாக மாறி வரும் உலகைப் புரிந்துகொண்டு தங்களை மேம்படுத்திக் கொள்ளலாம்.

செய்தித்துறைக்கு உயிர்களைக் காப்பாற்றும் ஆற்றலும் நம்பிக்கையை வளர்க்கும் திறனும் உள்ளன. எனவே ஊடகத்துறை நல்லவற்றுக்குப் பயன்படுத்தக்கூடிய ஆயுதமாக உள்ளதை அனைத்துலகச் செய்தி தினம் மக்களுக்கு நினைவூட்டுகிறது.

COVID-19 சூழலில், தகவல்களை வழங்கும் சவாலைச் செய்தியாளர்களைப் போன்று செய்தி நிறுவனங்களும் ஏற்றுள்ளன. உலகம் எங்கும் உள்ள 100 செய்தி நிறுவனங்கள் எவ்வாறு கொரோனா கிருமித்தொற்றுச் சூழலில் செய்திகளை வழங்கியுள்ளன என்பதை இன்றைய தினம் எடுத்துக்காட்டுகிறது. நெருக்கடி நேரங்களில் சமூகங்களை ஒன்றிணைக்க செய்தியறைகள் ஆற்றியப் பங்கினை இவ்வாண்டு நடைபெறும் கொண்டாட்டங்களில் காணலாம்

என்று அனைத்துலகச் செய்தியாளர் மன்றத்தின் தலைவர் வாரன் ஃபெர்னாண்டஸ் தெரிவித்தார்.

இவ்வாண்டு 150 செய்தி நிறுவனங்களைச் சேர்ந்த செய்தியாளர்கள் அனைத்துலகச் செய்தி தினத்தில் பங்கேற்கின்றனர். ஊடகத்துறையின்மூலம் சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள ஆக்ககரமான மாற்றத்தை அவர்களது படைப்புகள் பிரதிபலிக்கும்.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்