Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உலக வர்த்தக நிறுவனத்தின் அமைச்சர்நிலைச் சந்திப்பு ஒத்திவைப்பு

கிருமிப்பரவல் பயணக் கட்டுப்பாடுகளால் உலக வர்த்தக நிறுவனம் நான்காண்டுகளில் முதன்முறையாக அமைச்சர்நிலைச் சந்திப்பை ஒத்திவைத்துள்ளது.

வாசிப்புநேரம் -
உலக வர்த்தக நிறுவனத்தின் அமைச்சர்நிலைச் சந்திப்பு ஒத்திவைப்பு

(படம்: Fabrice COFFRINI / AFP)

கிருமிப்பரவல் பயணக் கட்டுப்பாடுகளால் உலக வர்த்தக நிறுவனம் நான்காண்டுகளில் முதன்முறையாக அமைச்சர்நிலைச் சந்திப்பை ஒத்திவைத்துள்ளது.

ஜெனிவாவில் (Geneva) அடுத்த வாரம் அந்தச் சந்திப்பு நடக்கவிருந்தது.

மதிநுட்பச் சொத்து உரிமைகளுக்கு விலக்களிக்க வேண்டும் என்று வளரும் நாடுகள் பல வலியுறுத்துகின்றன.

COVID தடுப்பு மருந்துகளை இன்னும் வேகமாக உலகம் முழுவதும் விநியோகிக்க அது அனுமதிக்கும் என்று கருதப்படுகிறது.

அதுபற்றி அமைச்சர்நிலைக் கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்படவிருந்தது.

மதிநுட்பச் சொத்துரிமையில் விலக்களிக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

புதியவகைக் கிருமி கண்டறியப்பட்டுள்ள சூழலில் அது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்