Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உலகின் ஆகப் பழமையான சைவ உணவகம் சுவிட்ஸர்லந்தில்

ஹவுஸ் ஹில்டில் உணவகம் (Haus Hiltl).

வாசிப்புநேரம் -
உலகின் ஆகப் பழமையான சைவ உணவகம் சுவிட்ஸர்லந்தில்

படம்: Hiltl/Instagram

ஹவுஸ் ஹில்டில் உணவகம் (Haus Hiltl).

அதுதான் சுவிட்ஸர்லந்தின் ஸுரிக் நகரில் உள்ள உலகின் ஆகப் பழமையான சைவ உணவகம்.

ஹில்டில்(Hiltl) குடும்பத்தினர் நூறாண்டுக்கும் மேலாக உணவகத்தை நடத்திவருகின்றனர்.

வழக்கமாக மதிய உணவுக்காக நூற்றுக்கும் அதிகமான சைவ உணவு வகைகளை அந்த உணவகம் பரிமாறுகிறது.

இந்திய, ஆசிய, சுவிஸ், மத்தியத்தரைக் கடல் போன்ற பல உணவு வகைகளை ஒரே இடத்தில் சுவைத்துப் பார்க்கும் வாய்ப்பும் அங்கு கிடைக்கிறது.

ஹவுஸ் ஹில்டில் உணவகம் ஸுரிக் நகரின் ஆகப் பிரபலமான உணவகங்களில் ஒன்று மட்டுமல்ல...

உலகின் ஆகப் பழமையான சைவ உணவகம் எனும் கின்னஸ் உலகச் சாதனையைப் படைத்திருக்கும் உணவகமும் கூட.   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்