Images
  • Covid Cases
    (படம்: REUTERS/Akhtar Soomro)

உலக அளவில் 10 மில்லியனுக்கும் அதிகமானோரைப் பாதித்துள்ள COVID-19 நோய்த்தொற்று

உலக அளவில் COVID-19 நோய்த்தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 10 மில்லியனைத் தாண்டிவிட்டது.

இந்தியாவில் நேற்று மட்டும் 19,906 பேருக்கு நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

அங்கு சுமார் 530,000 கிருமித்தொற்றால் அவதிப்படுகின்றனர்.

இந்தியாவில் 16,000க்கும் அதிகமானோர் கிருமித்தொற்றால் மாண்டனர்.

தலைநகர் புதுடில்லி மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 80,000க்கும் அதிகமானோர் கிருமித்தொற்றால் அவதிப்படுகின்றனர்.

இந்தோனேசியாவில் மேலும் 1,198 பேருக்குக் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டது.

அவர்களையும் சேர்த்து அங்கு 54,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று அங்கு 34 பேர் மரணமடைந்தனர். அதனால் அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,754 க்கு உயர்ந்துள்ளது.

சீனாவில் நேற்று மேலும் 17 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அவர்களில் பெரும்பாலார் தலைநகர் பெய்ச்சிங்கைச் சேர்ந்தவர்கள்.

தென்மேற்கு வட்டாரத்தில் உள்ள மொத்த விற்பனைச் சந்தை கிருமித்தொற்று மையமாக உருவெடுத்துள்ளது.

தென் கொரியாவில் ஒரு வாரத்தில் ஆக அதிகமாக மேலும் 62 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

அதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,715க்கு உயர்ந்துள்ளது.

சமய ஒன்றுகூடல் இடம்பெற்ற தேவாலயங்கள் சில கிருமித்தொற்று இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.  

Top