Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

புதிய கொரோனா கிருமி - முக்கியச் சந்திப்பை ஒத்திவைத்த உலக வர்த்தக நிறுவனம்

 புதிய கொரோனா கிருமி - முக்கியச் சந்திப்பை ஒத்திவைத்த உலக வர்த்தக நிறுவனம்

வாசிப்புநேரம் -
புதிய கொரோனா கிருமி - முக்கியச் சந்திப்பை ஒத்திவைத்த உலக வர்த்தக நிறுவனம்

படம்: AFP

உலக வர்த்தக நிறுவனம் புதிய கொரோனா கிருமி வகை கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அது ஏற்பாடு செய்திருந்த சந்திப்பை ஒத்திவைத்துள்ளது.

கடந்த 4 ஆண்டுகளாக நடைபெறும் அமைச்சர்நிலைச் சந்திப்பு ஒத்திவைக்கப்படுவது இதுவே முதன்முறை.

நிறுவனத்தின் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் அடுத்த வாரம் சந்திக்கவிருந்தனர்.

புதிய கிருமி வகையால் விதிக்கப்பட்ட பயணத் தடைகள் காரணமாக, ஜெனிவாவில் நடைபெறவிருந்த சந்திப்புக்குப் பல அமைச்சர்கள் செல்ல முடியாமல் போகலாம் என்று நிறுவனம் சொன்னது.

சந்திப்புக்கான இன்னொரு தேதி இன்னும் முடிவுசெய்யப்படவில்லை. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்