Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

சீனாவில் மீண்டும் கிருமிப்பரவல்... கடைசி நிமிடத்தில் ஒத்திவைக்கப்பட்ட வூஹான் நெடுந்தொலை ஓட்டம்

சீனாவில் இன்று (24 அக்டோபர்) நடைபெறவிருந்த வூஹான் நெடுந்தொலை ஓட்டம், கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
சீனாவில் மீண்டும் கிருமிப்பரவல்... கடைசி நிமிடத்தில் ஒத்திவைக்கப்பட்ட வூஹான் நெடுந்தொலை ஓட்டம்

(படம்: AFP)

சீனாவில் இன்று (24 அக்டோபர்) நடைபெறவிருந்த வூஹான் நெடுந்தொலை ஓட்டம், கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கிருமிப்பரவல் அங்கு மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளதே அதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

வூஹான் நெடுந்தொலை ஓட்டப் பந்தயத்தில் 26,000 பேர் கலந்துகொள்ளவிருந்தனர்.

அதற்குப் பதிவுசெய்தோரின் முன்பதிவுக் கட்டணத்தைத் திரும்பத் தருவதாக ஏற்பாட்டாளர்கள் உறுதிகூறினர்.

சீனாவில் கடந்த 24 மணி நேர இடைவெளியில் மேலும் 26 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இந்நிலையில் அடுத்த ஆண்டு பெய்ச்சிங்கில் இடம்பெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன.

எந்தவிதமான நோய்த்தொற்றும் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற நோக்கில் செயல்படுவதாகச் சீனா தெரிவித்தது.

மக்களிடையே பரவலாகக் கிருமித்தொற்றுப் பரிசோதனை நடத்துவது, குறிப்பிட்ட இடங்களை முடக்குவது போன்ற நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்