Images
  • donald trump xi jinping
    (படம்: Reuters)

சீன அதிபர் G20 உச்சநிலை மாநாட்டில் அமெரிக்க அதிபரைச் சந்திக்க இணக்கம்

சீன அதிபர் சி சின்பிங் G20 உச்சநிலை மாநாட்டில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பைச் சந்திக்க இணக்கம் தெரிவித்துள்ளார்.

அடுத்த வாரம் ஜப்பானின் ஒசாக்கா நகரில் G20 உச்சநிலை மாநாடு நடைபெறவுள்ளது.

கடந்த மாதம், அமெரிக்கா, சீனாவுக்கு இடையில் நடந்த சந்திப்பில் எந்தவோர் இணக்கமும் காணப்படவில்லை.

அதனை தொடர்ந்து, வர்த்தகத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் இருநாட்டு உறவைச் சீர்செய்வதன் நோக்கில் சந்திப்பு அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் உச்சநிலை மாநாட்டின்போது நடக்கவிருக்கும் சந்திப்பில் தீர்வுகள் கிடைக்கும் என்று உறுதியாகச் சொல்லமுடியாது எனத் திரு டிரம்ப்பின் பொருளியல் ஆலோசகர் லாரி குட்லோ (Larry Kudlow) வலியுறுத்தியுள்ளார்.

சீன பொருள்கள்மீது சுமார் 325 பிலலியன் டாலர் மதிப்பிலான வரிகளைச் செலுத்தவிருப்பதாகத் திரு. டிரம்ப் எச்சரித்து வருகிறார்.

மெதுவடைந்துவரும் சீன பொருளியலில் அந்த வரிகள் மேலும் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும் என்று உலகச் சந்தை வல்லுநர்கள் அக்கறை தெரிவித்துள்ளனர். 

Top