Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

'கொத்தடிமைகள்' மூலம் தயாரிக்கப்படுவதால் சீனப் பொருள்களுக்குத் தடைவிதிக்கும் அமெரிக்கா

சீனாவின் சின்ஜியாங் வட்டாரத்தில் தயாரிக்கப்படும் பெருமளவுப் பொருள்களை இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா தடை விதிக்கவுள்ளது.

வாசிப்புநேரம் -
'கொத்தடிமைகள்' மூலம் தயாரிக்கப்படுவதால் சீனப் பொருள்களுக்குத் தடைவிதிக்கும் அமெரிக்கா

(படம்: AFP/Greg Baker)

சீனாவின் சின்ஜியாங் வட்டாரத்தில் தயாரிக்கப்படும் பெருமளவுப் பொருள்களை இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா தடை விதிக்கவுள்ளது.

அந்தப் பொருள்கள் "கொத்தடிமைகள்" மூலம் தயாரிக்கப்படுவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டுகிறது.

பருத்தி, ஆடைகள், சிகையலங்காரப் பொருள்கள், மின்னியல் சாதனங்கள் ஆகியவற்றின் இறக்குமதிக்குத் தடை விதிக்கப்படும்.

சின்ஜியாங், ஆன்ஹுவி ஆகிய வட்டாரங்களைச் சேர்ந்த குறிப்பிட்ட ஐந்து உற்பத்தி நிறுவனங்கள் அதனால் பாதிக்கப்படும்.

சின்ஜியாங் வட்டாரத்தில் வசிக்கும் சிறுபான்மை வீகர் முஸ்லிம்களைச் சீனா தடுப்பு முகாம்களில் அடைத்து வைத்திருப்பதாகக் குறைகூறப்படுகிறது.

ஆனால், சீனா அந்தக் குற்றச்சாட்டை மறுத்து வருகிறது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்