Images
  • yellow vest (1)
    (படம்: AFP)

35ஆவது வார இறுதியாகத் தொடரும் மஞ்சள் சட்டை ஆர்ப்பாட்டம்

பிரான்சில்,மஞ்சள் சட்டை ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்களின் 35ஆவது தொடர் ஆர்ப்பாட்டத்தை நடத்த கூடியுள்ளனர்.

பாரிஸின் மிக மும்முரமான ரயில் நிலையத்திற்கு வெளியே அவர்கள் குழுமினர்.

அரசாங்கத்தின் சமூக, நிதிக் கொள்கைகளில் மாற்றங்கள் கொண்டு வரப்படவேண்டும் என்பதற்காக கடந்தாண்டு நவம்பர் மாதம் மஞ்சள் சட்டை ஆர்பாட்டம் தொடங்கியது.

மக்களை அமைதிப்படுத்த அரசாங்கம் அதன் பின்னர், வரியைக் குறைத்தது. அதனைத் தொடர்ந்து ஆர்பாட்டத்தின் அளவு குறைந்துள்ளது.

Top