Images
  • yemen (1)
    (படம்: AFP)

உலகின் மிக மோசமான பஞ்சத்தில் சிக்கிக் கொள்ளும் ஆபத்தில் ஏமன்

ஏமன் உலகின் மிக மோசமான பஞ்சத்தில் சிக்கிக்கொள்ளும் அபாயத்தில் உள்ளது என ஐக்கிய நாட்டு நிறுவனத் தலைமைச் செயலாளர் திரு அந்தோனியோ குட்டெரஸ் (Antonio Guterres) எச்சரித்துள்ளார்.

அதைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படாத பட்சத்தில் மில்லியன்கணக்கான மக்கள் மாண்டுபோகக்கூடும் என்றும் அவர் கூறினார்.

அங்கு ஐந்து ஆண்டுகளாக ஈரான் ஆதரவுபெற்ற ஹுதி (Huthi) கிளர்ச்சியாளர்களுக்கும் அரசாங்கப் படைகளுக்கும் இடையில் போர் தொடர்கிறது.

ஏமனின் பேரழிவைத் தடுக்க செல்வாக்குமிக்க அனைவரும் சீக்கிரம் செயல்படவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

நிறுவனத்தின் நிவாரணத் திட்ட நிதி பெருமளவு குறைந்துள்ளது. அதோடு, ஏமனிய நாணயத்தின் நிலைத்தன்மை பாதிப்படைந்துள்ளது. நிவாரண அமைப்புகளின் திட்டங்களுக்கு, அங்கு நிலவும் போர் தடையாக உள்ளது.

இவை அனைத்தும் ஏமன் மோசமான பஞ்சத்தை எதிர்கொள்ளக் காரணமாக இருக்கின்றன எனத் திரு குட்டெரஸின் அறிக்கை விளக்கியது.  

Top