Images
  • climate chnage youth
    (படம்: AFP/Sebastien Salom-Gomis)

பருவநிலை மாற்றத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டங்களை நடத்திய லட்சக்கணக்கான இளையர்கள்

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)


லட்சக்கணக்கான இளையர்கள் உலகம் முழுவதும் பருவநிலை மாற்றத்தை எதிர்த்து நேற்று ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

அந்த விவகாரத்தில் உலகத் தலைவர்கள் நடவடிக்கை எடுக்கக் கோரி அந்த ஆர்ப்பாட்டங்கள் நடந்தேறின.

நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் பேங்காக், பெர்லின், லாகோஸ், லண்டன் முதலிய தலைநகரங்களில் மாணவர்கள் வீதிகளில் திரண்டனர்.

கனடாவின் மொண்ட்டிரியால் நகரில் மட்டும் 150,000 பேர் திரண்டனர். 

Top