Images
  • youtube
    (படம்: YouTube/Dennis Riley)

இரவில் பல பெண்களை உறங்க வைக்கும் கனவுக் கண்ணன்

17 வயது ஓவன் டென்னிஸ் ரைலிக்கு (Owen Dennis Riley) நிஜ வாழ்க்கையில் காதலி இல்லை. ஆனால் YouTube இல் அவர் சுமார் 500,000 பெண்களுக்குக் காதலராக இருக்கின்றார்.

காதலர் தினத்தன்று அன்பளிப்புகள் கொடுத்து, நெஞ்சை நெகிழச் செய்யும் பாடல்களையும் பாடுவார் அவர். முக்கியமாக இரவில் தேன் போன்ற குரலில் பேசி உறங்கச் செய்வார்.

பல பெண்களின் மன அழுத்தத்தை மறக்கச் செய்து அவர்களை துயில்கொள்ளச் செய்கிறார் ரைலி.

ஒலிவாங்கியில் ரகசியம் ஓதுவதுபோல பேசி, அதை மெல்ல வருடுதுவதுண்டு. அதனால் வெளிவரும் ஒலிகள் மனத்தை அமைதி கொள்ளச் செய்கின்றன.

ASMR என்ழைக்கப்படும் ஒலிகள் காதலர்களின் அக்கறையால் கிடைக்கும் உணர்வு என்று கூறப்படுகிறது.

YouTubeஇல் இதைப் போன்ற 'காதலர்கள்' கடந்த ஐந்தாண்டுகளாக இடம்பெற்று வருகிறார்கள்.

இதற்கு முன் பலதரப்பட்ட காணொளிகளைப் பதிவேற்றம் செய்த ரைலி, ASMR காணொளிகளைப் பதிவேற்றம் செய்யத் தொடங்கியதிலிருந்து பிரபலமடைந்துள்ளதாகக் கூறியுள்ளார்.

காணொளிகளின் மூலம் பணம் ஈட்டும் ரைலி, தம் காணொளிகள் மற்றவர்களுக்கு உதவுவதில் மனநிறைவு பெறுவதாகக் கூறினார். 

Top