Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

TikTokக்கு இணையான தளத்தை இந்தியாவில் சோதனை செய்யவிருக்கும் YouTube

TikTokக்கு இணையான தளத்தை இந்தியாவில் சோதனை செய்யவிருப்பதாக YouTube நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -

TikTokக்கு இணையான தளத்தை இந்தியாவில் சோதனை செய்யவிருப்பதாக YouTube நிறுவனம் தெரிவித்துள்ளது.

வரும் மாதங்களில் சிறிய காணொளிகளைத் தயாரிக்க உதவும் அத்தகைய தளம் மற்ற நாடுகளிலும் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதன் பெயர் YouTube Shorts.

TikTok நிறுவனம், அமெரிக்காவில் தடைசெய்யப்படுவதைத் தவிர்க்க Oracle நிறுவனத்துடன் இணைவதாக அண்மையில் தகவல் வெளியானது.

இவ்வேளையில் YouTube Shorts தளம் அறிமுகம் கண்டுள்ளது.

கைத்தொலைபேசிகளில் குறுங்காணொளிகளைத் தயாரிக்க Shorts வகைசெய்யும் என்று YouTube நிறுவனத்தின் துணைத்தலைவர் தெரிவித்தார்.

தளத்தின் மூலம் 15 விநாடிக் காணொளிகளைத் தயாரிக்க முடியும்.

சோதனைக்குப் பின் திரட்டப்படும் கருத்துக்களை வைத்துத் தளத்தில் மாற்றங்கள் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

TikTok தளத்தின் காணொளிகள் உலகெங்கும் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளன.

ஆனால் அமெரிக்க அரசாங்க அதிகாரிகளைக் கண்காணிக்க சீனா அந்தச் செயலியைப் பயன்படுத்துவதாய்ச் சுட்டி அதிபர் டோனல்ட் டிரம்ப் அதற்குத் தடைவிதித்தார்.

இம்மாதம் 20ஆம் தேதிக்குள் சீன செயலியான TikTok அதன் அமெரிக்கச் செயல்பாடுகளை விற்கவேண்டும் என்று உத்தரவிட்டார் அதிபர் டிரம்ப். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்