Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

மின்-ஸ்கூட்டர் விபத்தில் மாண்ட YouTube பிரபலம்

YouTubeஇல் பிரபலமான லண்டனைச் சேர்ந்த மாது ஒருவர், தமது ரசிகர்களைக் காணச் சென்ற வழியில் மாண்டார்.

வாசிப்புநேரம் -

YouTubeஇல் பிரபலமான லண்டனைச் சேர்ந்த மாது ஒருவர், தமது ரசிகர்களைக் காணச் சென்ற வழியில் மாண்டார்.

பேட்டசீ (Battersea) வட்டாரத்தில் தமது வீட்டுக்கருகே மின்-ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்த (எமிலி ஹாட்ரிட்ஜ்) Emily Hatridge, லாரியில் மோதியதாகத் தெரிவிக்கப்பட்டது.

பிரிட்டனில் மின்-ஸ்கூட்டர் ஓட்டுநர் ஒருவர் விபத்தில் மாண்ட முதல் சம்பவம் அது என நம்பப்படுகிறது.

35 வயது திருவாட்டஹாட்ரிட்ஜ் சம்பவ இடத்திலேயே மாண்டார்.

சம்பவத்தின் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

வாழ்க்கைமுறை, உடலுறுதி, பயணங்கள் ஆகிய கருப்பொருள்களில் அமைந்த காணொளிகளைத் திருவாட்டி ஹாட்ரிட்ஜ் YouTubeஇல் பதிவிட்டு வந்தார்.

சுமார் 350,000 அந்தக் காணொளிகளைத் தொடர்ந்து கண்டுவந்தனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்