Images
  • Zebra Shot Dead
    (படம்: AFP)

ஜெர்மனி: சர்க்கஸ் கூடாரத்திலிருந்து விரைவுச்சாலைக்கு ஓட்டம்பிடித்த வரிக்குதிரை

ஜெர்மானிய சர்க்கஸ் கூடாரத்திலிருந்து தப்பி விரைவுச்சாலையில் விபத்து நேரக் காரணமாய் இருந்த ஒரு வரிக்குதிரை சுட்டுக்கொல்லப்பட்டதாக அந்நாட்டுக் காவல்துறை தெரிவித்துள்ளது.

ஜெர்மனியின் வடக்குப் பகுதியிலுள்ள ரொஸ்டொக் (Rostock) எனும் நகரில் நடந்த அச்சம்பவம் குறித்து BBC தகவல் வெளியிட்டது.

சர்க்கஸ் கூடாரத்திலிருந்து இரு வரிக்குதிரைகள் தப்பியோடின.

அவற்றில் ஒன்று A20 விரைவுச்சாலையில் கார்களைச் சேதப்படுத்தியதோடு விபத்து நேரவும் காரணமானது.


இதனால் விரைவுச்சாலை சில மணிநேரம் தற்காலிகமாக மூடப்பட்டது.

வரிக்குதிரையை உயிருடன் பிடிக்கும் முயற்சிகள் கைகொடுக்காத நிலையில் அது துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு வரிக்குதிரை உயிருடன் பிடிக்கப்பட்டது.

விலங்குகள் எப்படி சர்க்கஸ் கூடாரத்திலிருந்து தப்பின என்பது இதுவரை தெரியவில்லை.

BBC தகவல்படி சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை. 

Top