Images
  • Mugabe in Singapore Hospital
    (படம்: Reuters/Siphiwe Sibeko)

ஸிம்பாப்வே முன்னாள் அதிபர் முகாபேவின் இறுதிச் சடங்கு அடுத்த வாரயிறுதியில்

ஸிம்பாப்வேயின் முன்னாள் அதிபர் ராபர்ட் முகாபேயின் இறுதிச் சடங்கை அடுத்த வாரயிறுதியில் நடத்தத் திட்டமிட்டுள்ளது ஸிம்பாப்வே அரசாங்கம்.

ஹராரேவில் உள்ள விளையாட்டரங்கத்தில் இறுதிச் சடங்கு இடம்பெறும்.

முகாபேயின் நல்லுடல் எங்கு அடக்கம் செய்யப்படும் என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.

நீண்ட நாள்களாக உடல்நிலக் குறைவு காரணமாக சிங்கப்பூர் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த முகாபே கடந்த வெள்ளிக்கிழமை மாண்டார்.

சுமார் 40 ஆண்டுகளாக ஸிம்பாப்வேயின் அரசியலில் இருந்த முகாபே 2017ஆம் ஆண்டு பதவியிலிருந்து அகற்றப்பட்டார்.

Top