Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

பயணப் படிவத்தில் தவறான தகவல் குறிப்பிடப்பட்டதற்கு முகவரே காரணம்: ஜோக்கோவிச்

வாசிப்புநேரம் -

ஆஸ்திரேலியாவுக்கான பயணப் படிவத்தில் தவறான தகவல் குறிப்பிடப்பட்டதற்குத் தம்முடைய முகவரே காரணம் என்று டென்னிஸ் வீரர் நோவாக் ஜோக்கோவிச் (Novak Djokovic) தெரிவித்துள்ளார். 

குடிநுழைவுப் படிவத்தில் நேர்ந்த மனிதத் தவற்றுக்காக அவர் மன்னிப்புக் கோரினார்.  

சென்ற வியாழக்கிழமை ஜோக்கோவிச் மெல்பர்ன் சென்று சேர்ந்தார். 

அதற்கு முன் 14 நாள், வேறு எந்தப் பயணமும் செய்யவில்லை என்று அவருடைய குடிநுழைவுப் படிவத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

ஆனால், அவர் செர்பியாவுக்கும், ஸ்பெயினுக்கும் சென்றிருந்ததை சமூக ஊடகப் பதிவுகள் காட்டிக் கொடுத்தன. 

ஆனால், அந்தக் காலத்தில் ஜோக்கோவிச், தங்கள் நாட்டில் இருந்தார் என்பதற்கு எந்தச் சான்றும் இல்லை என்று ஸ்பெயின் வெளியுறவு அமைச்சர் கூறினார். 

தடுப்பூசி போட்டுக் கொள்ளாததால் ஜோக்கோவிச்சின் விசாவை ரத்துசெய்து அவரை நாட்டைவிட்டு வெளியேற்ற  ஆஸ்திரேலியக் குடிநுழைவுத் துறை பரிசீலிக்கும் வேளையில் ஸ்பெயின் வெளியுறவு அமைச்சர் அவ்வாறு தெரிவித்துள்ளார். 

குடிநுழைவுப் படிவத்தில் பொய்த் தகவலைக் குறிப்பிட்டதற்காக ஓராண்டு வரை சிறைத் தண்டனை விதிக்க ஆஸ்திரேலியச் சட்டத்தில் இடமுண்டு. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்