Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தோல்வியடைந்தால் கட்சிக்காரர்கள் வழக்கறிஞருக்குக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தோல்வியடைந்தால், கட்சிக்காரர்கள் இப்போது தங்கள் வழக்கறிஞருக்குக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. 

நிபந்தனையுடன் கூடிய உடன்பாட்டின்கீழ் அது சாத்தியமாகும். 

சச்சரவுகளுக்குத் தீர்வுகாணும் நடுவம் எனும் சிங்கப்பூரின் நிலையை மேம்படுத்தும் நோக்கில், புதிய நடைமுறை அறிமுகமானது. 

வழக்கு வெற்றிபெறும்பட்சத்தில், வழக்குரைஞர்கள் வழக்கமான கட்டணத்துக்கு அப்பாற்பட்டுக் கூடுதல் கட்டணம் வசூலிக்கவும் அனுமதிக்கப்படுவர். 

அதுபற்றிய விவாதத்தின்போது, வழக்குக் கட்டணம் அதிகரிக்கும் சாத்தியம் குறித்துத் திரு. முரளி பிள்ளை உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அக்கறை தெரிவித்தனர். 

கட்சிக்காரரே கூடுதல் கட்டணம் கொடுக்கத் தயாராக இருந்தாலும்கூட, மிதமிஞ்சிய கட்டணம் வசூலிக்கப்படும் சாத்தியம் இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். 

ஆனால், அவ்வாறு நேராமல் தடுப்பதற்குப் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசாங்கம் செய்துள்ளதாக, இரண்டாம் சட்ட அமைச்சர் எட்வின் தோங்  தெரிவித்தார். 

எடுத்துக்காட்டாக, நீதிமன்றம் தீர்ப்பளித்த இழப்பீட்டுத் தொகையில் விழுக்காட்டு அடிப்படையில் வழக்கறிஞர்கள் கட்டணம் வசூலிக்க முடியாது என்பதை அவர் சுட்டினார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்