Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

டென்னிஸ் வீரர் ஜோக்கோவிச் விசா விவகாரம் - கருத்து தெரிவிக்க மறுக்கும் ஆஸ்திரேலியப் பிரதமர்

வாசிப்புநேரம் -
டென்னிஸ் வீரர் ஜோக்கோவிச் விசா விவகாரம் - கருத்து தெரிவிக்க மறுக்கும் ஆஸ்திரேலியப் பிரதமர்

(Mike FREY / AFP)

ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன் (Scott Morrison), செர்பிய டென்னிஸ் நட்சத்திரம் நோவாக் ஜோக்கோவிச்சின் (Novak Djokovic) விசா நிலையைப் பற்றிக் கருத்துத் தெரிவிக்க மறுத்துள்ளார். 

அதுபற்றிக் குடிநுழைவு அமைச்சர் முடிவெடுப்பார் என்று பிரதமர் மோரிசன் கூறினார். 

அந்நாட்டு அரசாங்கம் ஜோக்கோவிச்சின் விசாவை இரண்டாம் முறையாக ரத்து செய்யுமா என்பது குறித்துக் குழப்பம் எழுந்துள்ளது. 

 

ஆஸ்திரேலியப் பொதுவிருதுப் போட்டியின் ஆட்ட விவரங்களின் பட்டியலில் அவரின் பெயர் இடம்பெற்றுள்ளது. 

 

இதற்கிடையே குடிநுழைவு அமைச்சர் அலெக்ஸ் ஹாக் (Alex Hawke)  ஜோக்கோவிச்சின் விசாவை மீண்டும் ரத்து செய்வது குறித்து யோசித்துவருவதாகத் தெரிவிக்கப்பட்டது. 

அவ்வாறு அவரின் விசா ரத்து செய்யப்பட்டால், ஜோக்கோவிச் பெரிய பொதுவிருதுப் போட்டிகளில் 21ஆம் முறை வெற்றிபெற்று சாதனை படைப்பதற்கான வாய்ப்பில்லாமல் போகக்கூடும். 

ஆதாரம் : Reuters

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa