Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

COVAX திட்டத்தின்கீழ் 100 மில்லியனுக்கு மேற்பட்ட தடுப்பு மருந்துகளை விநியோகிக்க வேண்டாம் - ஏழை நாடுகள்

வாசிப்புநேரம் -

COVAX திட்டத்தின்கீழ் 100 மில்லியனுக்கு மேற்பட்ட தடுப்பு மருந்துகளை விநியோகிக்க வேண்டாம் என்று ஏழை நாடுகள் கூறியுள்ளன. 

காலாவதித் தேதியை நெருங்கும் தடுப்பு மருந்துகள், அவற்றைப் பாதுகாத்து வைக்கும் குளிர்பதனப் பெட்டி வசதி இல்லாதது ஆகிய காரணங்களால் சென்ற மாதம் அவை அவ்வாறு கூறின. 

இருப்பினும், COVAX திட்டத்தின் மூலம் சுமார் 150 ஏழை நாடுகளுக்கு ஐக்கிய நாட்டு நிறுவனம் ஒரு பில்லியன் முறை பயன்படுத்தத் தேவையான தடுப்பு மருந்துகளை வழங்கும் இலக்கை நெருங்கிவருகிறது. 

700 மில்லியன் முறை பயன்படுத்தத் தேவையான தடுப்பு மருந்துகள், பொதுமக்களுக்குச் செலுத்தத் தயார் நிலையில் உள்ளதாக, UNICEF எனும் ஐக்கிய நாட்டுக் குழந்தைகள் நிதியம்  தெரிவித்தது.  

மக்களில் பெரும்பாலோருக்குத் தடுப்பூசி போட்டு முடித்து விட்டதால், கடந்த காலாண்டில்
பணக்கார நாடுகள், அதிகமான தடுப்பு மருந்துகளை அனுப்பின. அந்த திடீர் விநியோகத்தைச் சமாளிக்க பெரும்பாலான ஏழை நாடுகள் தயாராக இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்