Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பிரதமர் லீ சியென் லூங் உள்ளிட்ட சிங்கப்பூர்த் தலைவர்கள் பொங்கல் வாழ்த்து!

வாசிப்புநேரம் -
பிரதமர் லீ சியென் லூங் உள்ளிட்ட சிங்கப்பூர்த் தலைவர்கள் பொங்கல் வாழ்த்து!

படம்: MCI

பிரதமர் லீ சியென் லூங் தமது பொங்கல் வாழ்த்துகளை சமூக ஊடகம் வழி தெரிவித்துள்ளார்.

பொங்கல் என்னும் அறுவடைத் திருவிழாவைத் தமிழர்கள் நான்கு நாட்கள் கொண்டாடுவார்கள் என்று திரு. லீ கூறினார்.

அறுவடை சிறப்பாய் அமைந்ததற்காக சூரியனுக்கும் இயற்கை அன்னைக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாகப் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது என்றார் பிரதமர் லீ. 

இவ்வாண்டும் பொங்கல் கொண்டாட்டங்கள் COVID-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

இருப்பினும், இப்போது நாம் மேம்பட்ட நிலையில் உள்ளதாகப் பிரதமர் லீ கூறினார்.

இந்திய மரபுடைமை நிலையத்தில் பொங்கல் நிகழ்ச்சிகள் இடம்பெறுவதையும் அவர் சுட்டினார்.

பிரித்தம் சிங் (எதிர்க்கட்சித் தலைவர்) 

பொங்கல் திருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகள்!

COVID-19 சூழலுக்கு முன்பு பொங்கலுக்காக பல நடவடிக்கைகள் இடம்பெறும், அதன் மூலம் வித்தியாசமான கலாசார அனுபவங்கள் எனக்குக் கிடைத்தன. 

பொங்கல்பற்றி மேலும் பல விவரங்கள் தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக அது அமைந்தது. 

நேரம் கிடைத்தால், இந்திய மரபுடைமை நிலையத்தில் நடக்கும் பொங்கல் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளுங்கள்.

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்!

ஹெங் சுவீ கியெட் (துணைப் பிரதமர்)


இவ்வாண்டு பொங்கல் கொண்டாட்டத்திற்காக சில நிகழ்ச்சிகள் இடம்பெறுவது மகிழ்ச்சி தருகிறது.

நான்கு நாட்கள் கொண்டாடும் தமிழர்களின் அறுவடைப் பண்டிகை அது.

பண்டிகையின் ஒரு நாள் ஆடு, மாடு, கன்றுகள் ஆகியவற்றுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடப்படும்.

லிட்டில் இந்திய வட்டாரத்தில், அவற்றைப் பார்க்கவும் முடியும்.

உடல்நலமும், செல்வமும் பெற எல்லாருக்கும் பொங்கல் வாழ்த்துகள்! 

விவியன் பாலகிருஷ்ணன் (வெளியுறவு அமைச்சர்) 

தமிழ் மாதமான தை மாதத்தின் முதல் நாள் இன்று. அறுவடைக்கு நன்றி கூறும் நாளாக உள்ளது.

இந்நாளில் நமது குடும்பங்கள் மீதும் சமூகம் மீதும் அளவில்லா ஆசீர்வாதங்கள் கிடைக்கட்டும்.

அடுத்த ஆண்டு எப்போதும்போல் பெங்கல் கொண்டாட்டங்களைக் கொண்டாடுவோம் என்று நம்புவோம் என்றார் டாக்டர்  பாலகிருஷ்ணன். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்