Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பிரான்ஸில் புதிதாக 305,000-க்கும் அதிகமானோருக்கு நோய்த்தொற்று

வாசிப்புநேரம் -

பிரான்ஸில் COVID-19 நோய்த்தொற்றின் தீவிரம் குறையவில்லை.

24 மணி நேர இடைவெளியில் அந்நாட்டில் புதிதாக 305,000-க்கும் அதிகமானோருக்கு நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று பிரான்ஸில் முன்னெப்போதும் இல்லாத அளவில் ஒரே நாளில் 370,000-க்கும் அதிகமானோருக்குப் புதிதாக COVID-19 நோய்த்தொற்று அடையாளம் காணப்பட்டது. 

அந்நாட்டில் கடந்த 7 நாள்களில் சராசரியாக  நாள் ஒன்று புதிதாக நோய்த்தொற்றுக்கு
ஆளானவர்களின் எண்ணிக்கை சுமார் 294,000ஆக உள்ளது. 

இந்நிலையில் பிரான்ஸ், பிரிட்டிஷ் பயணிகளுக்கு விதித்த தடைகளை நீக்கியுள்ளது.

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் நோய்த்தொற்று இல்லை என்ற சான்றிதழ்களைச் சமர்பித்துவிட்டால் பிரான்ஸுக்குள் அனுமதிப்படுவார்கள்.

ஓமக்ரான் கிருமிப்பரவல் காரணமாக பிரான்ஸ் கடந்த மாதம் 16ஆம் தேதி அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு அறிவித்திருந்தது. 

-Reuters/ec

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்