Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

முக்கிய மருந்துகளின் விலையை வானளவு உயர்த்திய நிறுவனருக்கு வாழ்நாள் தடை

வாசிப்புநேரம் -
முக்கிய மருந்துகளின் விலையை வானளவு உயர்த்திய நிறுவனருக்கு வாழ்நாள் தடை

(கோப்புப் படம்: AP Photo/Susan Walsh)

அமெரிக்காவில் முக்கிய மருந்துகளின் விலையைக் கணிசமாக உயர்த்திய மருந்தாக்க நிறுவனருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மார்டின் ஸ்ரேலி (Martin Shkreli) என்ற ஆடவர் 2015-ஆம் ஆண்டில் Daraprim எனும்  HIV மருந்தின் விலையை சுமார் 5,000 விழுக்காடு அதிகரித்தார்.

மாத்திரை ஒன்றின் விலை 13.50 என்பதிலிருந்து 750 டாலருக்கு அதிகரிக்கப்பட்டது.

விலையேற்றம்வழி 64.6 மில்லியன் டாலர் மதிப்புள்ள லாபத்தைக் கண்ட திரு. ஸ்ரேலியை பணத்தைத் திருப்பிக் கொடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Daraprim மருந்தின் மூலப்பொருள்களைத் தம்முடைய நிறுவனமே பெறுவதை வகைசெய்யும் ஒப்பந்தத்தையும் அவர் ஏற்பாடு செய்ததாகக் கூறப்பட்டது.

ஏகபோக உரிமைகளுக்கு எதிரான சட்டங்களைத் திரு. ஸ்ரேலி மீறியதாகத் தெரிவிக்கப்பட்டது.

அவர் ஏற்கனவே முதலீட்டாளர்களை ஏமாற்றியதன் தொடர்பில் 7 ஆண்டுச் சிறைத்தண்டனையை நிறைவேற்றி வருகிறார்.

-AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa