Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

டோங்காவில் எரிமலை வெடிப்பு, சுனாமி

வாசிப்புநேரம் -
டோங்காவில் எரிமலை வெடிப்பு, சுனாமி

(படம்: AFP)

டோங்கா தீவு நாட்டை ஒரு சில நாள்களிலேயே 2ஆவது சுனாமி தாக்கியுள்ளது.

அங்கு பெரிய அளவிலான எரிமலை வெடிப்பு நேர்ந்ததை அடுத்து சுனாமி ஏற்பட்டுள்ளது.

நுகுவாலோஃபா (Nukualofa) வட்டாரத்தில் 1.2 மீட்டர் உயரச் சுனாமி அலை பதிவு செய்யப்பட்டதாக ஆஸ்திரேலியாவின் வானிலை ஆய்வுத்துறை கூறியது.

அங்கு நேற்று (ஜனவரி 14) விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை மீட்கப்பட்ட ஒரு சில மணி நேரத்திலேயே  Hunga Tonga-Hunga Ha'apai எரிமலை மீண்டும் வெடித்தது.

வெடிப்பு 8 நிமிடங்களுக்கு நீடித்தது.

கடலோர வட்டாரங்களில் வசிப்போர் உயரமான இடங்களுக்குச் செல்லுமாறு வலியுறுத்தப்பட்டனர்.

டோங்காவில் நேர்ந்த எரிமலை வெடிப்பு சுமார் 800 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஃபிஜி தீவிலும் உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

டோங்கா தீவு பசிபிக் பெருங்கடலில் உள்ளது.

-AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa