Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உலகளாவிய COVID-19 பரவலைக் கையாள இந்தியா உதவுகிறது: இந்தியப் பிரதமர் மோடி

வாசிப்புநேரம் -

உலகளாவிய கிருமிப்பரவலைக் கையாள, இந்தியா உதவிவருவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

டாவோஸில் நடைபெறும் உலகப் பொருளியல்  கருத்தரங்கின் முதல்நாள் கூட்டத்தில் இணையத்தின்வழி சிறப்புரை ஆற்றியபோது அவர் அதனைத் தெரிவித்தார். 

இந்திய மருத்துவர்களும் சுகாதாரத்துறை நிபுணர்களும் தங்கள் உன்னத நிபுணத்துவம் வழியாக உலகின் நம்பிக்கையைப் பெற்றுள்ளதாகத் திரு. மோடி குறிப்பிட்டார். 

உலகின் மூன்றாவது ஆகப்பெரிய மருந்து உற்பத்தியாளராக இந்தியா விளங்குவதை அவர் சுட்டினார். 

சுகாதாரத்தை உலகளாவிய ஒன்றாகக் கருதும் இந்தியா உயிர்காக்கும் மருந்துகளையும் தடுப்புமருந்துகளையும் பல நாடுகளுக்கு வழங்கிக் கோடிக்கணக்கான மக்களைக் காப்பாற்றுவதாக அவர் கூறினார். 

கிருமிப்பரவல் காலத்தை இந்தியா, சீர்திருத்தங்களை அறிமுகம் செய்யப் பயன்படுத்திக்கொண்டதாகவும் திரு. மோடி தெரிவித்தார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்