Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

மியன்மாரில் நெருக்கடி நிலை கடுமையாவதைத் தடுக்கத் தாய்லந்தின் ஆதரவை நாடும் ஐக்கிய நாட்டு நிறுவனம்

வாசிப்புநேரம் -

மியன்மாரில் நெருக்கடி நிலை மோசமடைவதைத் தடுக்க அந்நாட்டிற்கான ஐக்கிய நாட்டு நிறுவனச் சிறப்புப் பேராளர் நோலீன் ஹெய்சர் (Noeleen Heyzer) தாய்லந்தின் ஆதரவை நாடியுள்ளார்.

தாய்லந்துப் பிரதமர் பிராயுத் சான் ஓச்சா இந்த விவகாரத்தில் தம்முடைய ஆதரவு தொடரும் என்று உறுதியளித்துள்ளார்.

ராணுவ நடவடிக்கைகளிலிருந்து தப்பி வெளியேறும் மியன்மார் அகதிகள் பாதுகாக்கப்படுவர், சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்படமாட்டார்கள் என்றார் அவர்.

மியன்மாரும் தாய்லந்தும் நீண்டகால உறவைக் கொண்டுள்ளன. 

இருநாட்டிற்கும் அருகில் உள்ள எல்லைப் பகுதியில் சண்டை மூண்டதிலிருந்து ஆயிரக்கணக்கான மியன்மார் குடிமக்கள் தாய்லந்திற்குத் தப்பிச் சென்றுள்ளனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்