Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தைப்பூசத்தில் நிறைவாய் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள் - ஏற்பாட்டுக் குழுவுக்குப் பாராட்டு

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் இவ்வாண்டின் தைப்பூசத் திருவிழா இன்று இனிதே இடம்பெற்றுவருகிறது.

அதிகாலை முதல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நேர்த்திக்கடனைச் செலுத்தி வருகின்றனர்.

கிருமித்தொற்றுக்கு எதிரான பாதுகாப்பு நடைமுறைகளுடன் நடந்துவரும் தைப்பூசம் குறித்துச் சில பக்தர்கள் தங்கள் அனுபவத்தை "செய்தி"-யுடன் பகிர்ந்து கொண்டனர்.

சென்ற ஆண்டைவிட இவ்வாண்டின் ஏற்பாடுகள் திருப்தியாகவும் வேகமாகவும் இருந்ததாக பக்தர்கள் கூறினர்.

COVID-19 கட்டுப்பாடுகளால் எந்தப் பாதிப்புகளும் இல்லை. 
ஆலயத்தில் கூட்டமும் குறைவாக இருந்தது, அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட நேரத்தில் வழிபட வந்ததால் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் கூறினர்.

விதிமுறைகளை அனைவரும் பின்பற்றியதால் தைப்பூசத் திருவிழா மிகவும் அமைதியாக இருந்தது, கோவிலுக்குள் செல்வது, கடவுளை வழிபடுபவது, ஆலயத்திலிருந்து வெளியேறுவது என அனைத்து ஏற்பாடுகளும் அழகாக செய்யப்பட்டிருந்தது மகிழ்ச்சி தருவதாக பக்தர்கள் கூறினர்.

பக்தர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. சென்ற ஆண்டைவிட இவ்வாண்டு கூட்டம் சற்று அதிகம். ஒரு மணிநேரத்திற்குச் சுமார் 1,000 உணவுப் பொட்டலங்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டுவருவதாகத் தொண்டூழியர் வெங்கட் கண்ணதாசன் "செய்தி"-யிடம் கூறினார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்