இஸ்ரேல் 2ஆவது booster தடுப்பூசி போடுவதைக் கைவிடாது

(படம்: REUTERS/Heo Ran)
இஸ்ரேல் COVID-19 நோய்த்தொற்றுக்கான 2ஆவது booster தடுப்பூசி போடுவதைக் கைவிடாது என்று அறிவித்துள்ளது.
தனது நாட்டில் உள்ளவர்களுக்கு 4ஆவது தடுப்பூசி போடும் பணிகள் தொடர்ந்து இடம்பெறும் என்றும் அது கூறியது.
4ஆவது தடுப்பூசி போடுவதால் ஓமக்ரான் கிருமி பாதிப்பிலிருந்து பாதுகாப்புப் பெறமுடியாது என்று அண்மை ஆய்வொன்று தகவல் வெளியிட்டது.
அதைத்தொடர்ந்து இஸ்ரேலின் தடுப்பூசி குறித்த கருந்து வெளிவந்துள்ளது.
இஸ்ரேலில் கடந்த மாதம் முதல் 2ஆவது booster தடுப்பூசி போடும் பணிகள் நடந்துவருகின்றன.
நோய்த்தொற்றால் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து அங்கு தடுப்பூசி போடப்படுகிறது.
பொதுமக்கள் தொடர்ந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் இஸ்ரேல் கேட்டுக்கொண்டது.
ஓமக்ரான் கிருமியால் இஸ்ரேலில் பலர் பாதிக்கப்பட்டனர். இருப்பினும் அங்கு சுகாதார கட்டமைப்பில் எந்த நெருக்கடியும் ஏற்படவில்லை.
- Reuters