Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

நாடு முன்னெப்போதும் இல்லாத பேரழிவை எதிர்கொண்டுள்ளது: டோங்கா அரசாங்காம்

வாசிப்புநேரம் -

கடலடி எரிமலை வெடிப்பால் பாதிக்கப்பட்டுள்ள  டோங்கா, முன்னெப்போதும் இல்லாத பேரழிவை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவித்திருக்கிறது. 

எரிமலை வெடிப்பைத் தொடர்ந்த சுனாமிக்குப் பின், அங்குள்ள நிலவரத்தை அந்நாட்டு அரசாங்கம் வெளியிட்டிருப்பது இதுவே முதன்முறை. 

சுனாமியால் பிரிட்டிஷ் பெண்மணி ஒருவரும் உள்ளூர்க்காரர்கள் இருவரும் மாண்டதை அரசாங்க அறிக்கை உறுதிப்படுத்தியது. 

சிறிய, தொலைதூரத் தீவுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. அங்குள்ள ஒரு தீவில் வீடுகள் முற்றாக அழிந்தன. மற்றொன்றில் 2 வீடுகள் மட்டுமே எஞ்சின. 

எரிமலையில் இருந்து வெளியேறும் சாம்பல் காரணமாக நிவாரணப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. 

தலைநகரிலுள்ள முக்கிய விமான நிலையத்தின் ஓடுபாதையிலுள்ள சாம்பலை அப்புறப்படுத்தும் பணியில், தொண்டூழியர்கள் ஈடுபட்டுள்ளனர். 

டோங்காவை உலகின் மற்ற பகுதிகளோடு இணைக்கும் ஒரே ஒரு கடலடிக் கம்பிவடம் அறுபட்டதால் தொடர்புவசதிகள் அங்கே துண்டிக்கப்பட்டுள்ளன. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்