உலக நாடுகள் கெடுபிடிப் போர்க்கால மனநிலையிலிருந்து வெளிவர வேண்டும்: சீன அதிபர் சி

கோப்புப்படம்
சீன அதிபர் சி சின்பிங் உலக நாடுகள் கெடுபிடிப் போர்க்கால மனநிலையிலிருந்து வெளிவர வேண்டுமென அழைப்பு விடுத்திருக்கிறார்.
டாவோஸில் நடைபெறும் உலகப் பொருளியல் கருத்தரங்கின் முதல்நாள் கூட்டத்தில் அதை திரு சி தெரிவித்தார்.
மோதல்போக்கு, பேரழிவுதரும் பின்விளைவுகளையே உருவாக்கும் என்பதை வரலாறு மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளதாக அவர் சொன்னார்.
மாறாக, அமைதியோடு அருகருகே இணைந்துவாழ வழி வகுப்பதும், இருதரப்புக்கும் வெற்றிதரும் கொள்கைகளைக் கடைப்பிடிப்பதும் அவசியம் என்றார் அவர். அதுவே மனிதகுல எதிர்காலத்துக்கு உகந்தது என்றார் திரு. சி.
தைவான் குறித்த சீன-அமெரிக்கப் பூசல், உக்ரேன் மீதான உத்தேச ரஷ்ய ஊடுருவல்-சூழலுக்கு இடையே, சீன அதிபர் அதனைத் தெரிவித்தார்.