Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

' பிளாஸ்டிக் பொருள்களால் ஏற்படும் சுற்றுப்புறச் சீர்கேடு உலகளாவிய நெருக்கடி'

வாசிப்புநேரம் -

பிளாஸ்டிக் பொருள்களால் ஏற்படும் சுற்றுப்புறச் சீர்கேடு உலகளாவிய நெருக்கடி என்றும் அதற்குத் தீர்வுகாண ஐக்கிய நாட்டு நிறுவன உடன்பாடு தேவையென்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

EIA எனப்படும் சுற்றுப்புறப் புலனாய்வு அமைப்பு விடுத்த அறிக்கை, அதனைத் தெரிவித்தது. 

பிளாஸ்டிக்கால் நேரும் பாதிப்புகள் எண்ணற்றவை என்பதற்கு, ஏராளமான ஆதாரங்கள் இருப்பதாக அது குறிப்பிட்டது. 

பிளாஸ்டிக் பொருள்களால் உருவாகும் மாசுப் பிரச்சினை, கிட்டத்தட்ட பருவநிலை மாற்றத்தால் விளையும் பாதிப்புகளுக்குச் சமம் என்றது அமைப்பு. 

உலக மக்கள் சுவாசிக்கும் காற்றில்கூட நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் கலந்துள்ளன. ஆர்க்டிக் துருவப் பகுதியிலும்கூட பிளாஸ்டிக் கலந்துவிட்டது. 

குப்பை போடும் பகுதியில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை உட்கொண்டபிறகு தாய்லந்திலும் இலங்கையிலும் 20-க்கு மேற்பட்ட யானைகள் மடிந்துபோனதை, அமைப்பு சுட்டியது. 

எனவே, பிளாஸ்டிக் உற்பத்தியையும் கழிவுகளையும் குறைக்கும் திட்டவட்டமான இலக்குகளோடு நாடுகளைப் பிணைக்கும் ஐக்கிய நாட்டு நிறுவன உடன்பாடு அவசியம் என்று அமைப்பு வலியுறுத்தியது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa