மலேசிய புத்தாண்டு நிகழ்ச்சியில் 4 பேர் மரணம் - நஞ்சு தரப்பட்டதா?

Facebook/Pinkfish Festival
மலேசியாவில் புத்தாண்டு நிகழ்ச்சிக்குப் பின் திடீரென்று மாண்ட நால்வர் போதைப்பொருள் உட்கொண்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
சிலாங்கூர் மாநிலத்தில் இருக்கும் Sunway Lagoon கேளிக்கைப் பூங்காவில் Pinkfish Countdown 2024 என்ற கொண்டாட்ட நிகழ்ச்சி நடந்தது.
அதற்குச் சென்ற 20 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்ட நால்வர், ஒருவருக்குப் பின் ஒருவராக மாண்டனர்.
அவர்கள் எப்படி மாண்டனர் என்பதை அதிகாரிகள் ஆராய்கின்றனர்.
அவர்கள் ecstasy எனும் போதைப்பொருளை உட்கொண்டிருக்கலாம் என்று அதிகாரிகள் முதற்கட்ட விசாரணைக்குப்பின் கூறியுள்ளனர்.
உடல்களில் போதைப்பொருள் உண்மையில் இருந்ததா என்பதைக் காட்டும் சோதனை முடிவுகளுக்காக அவர்கள் காத்திருக்கின்றனர்.
நிகழ்ச்சிக்குச் சென்ற மேலும் மூவரும் ஒரே விதமான அறிகுறிகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
ஏழு பேருக்கும் நஞ்சூட்டப்பட்டதா என்பதை அவர்கள் பரிசீலிக்கின்றனர்.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் பாதிக்கப்பட்டோரின் நண்பர்களும் விசாரணைக்கு உதவுகின்றனர்.