Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

தென் கொரிய அதிபருக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லப்படலாம்

வாசிப்புநேரம் -
தென் கொரிய அதிபருக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லப்படலாம்

The Presidential Office/Handout via REUTERS/File Photo

வெளியீடு : 06 Jan 2025 08:01AM புதுப்பிப்பு : 06 Jan 2025 10:42AM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோலின் (Yoon Suk Yeol) வழக்கு அந்நாட்டின் உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லப்படலாம்.

திரு யூனின் வழக்கறிஞர்கள் அந்தத் தகவலைத் தெரிவித்துள்ளனர். 

திரு யூனைக் கைது செய்ய மீண்டும் முயற்சி எடுக்கப்படலாம் என்ற அக்கறை அதிகரித்துள்ளது. அவருக்கு விதிக்கப்பட்ட கைதாணை தென் கொரிய நேரப்படி இன்று நன்ளிரவு (6 ஜனவரி) காலாவதியாகிறது. 
 
கடந்த வெள்ளிக்கிழமை (3 ஜனவரி), ஊழல் புலனாய்வு அலுவலகம், காவல்துறை ஆகியவற்றின் அதிகாரிகள் திரு யூனைக் கைதுசெய்ய முயன்றனர். அதிபர் அலுவலகப் பாதுகாப்பு அதிகாரிகளின் எதிர்ப்புக்குப் பிறகு அந்த முயற்சி கைவிடப்பட்டது. 

திரு யூன் தொடர்ந்து அவரின் இல்லத்தில் இருக்கிறார்.

சென்ற மாதம் அவர் சில மணி நேரம் ராணுவ ஆட்சியை அறிவித்துப் பிறகு அதை மீட்டுக்கொண்டார். அதன் தொடர்பில் அவருக்குக் கைதாணை பிறப்பிக்கப்பட்டது. 

திரு யூன் இன்னமும் அந்நாட்டின் அதிபர் என்று அவரின் பாதுகாப்பு உயர் அதிகாரி கூறியிருக்கிறார். தென் கொரிய மக்கள் தேர்ந்தெடுத்த திரு யூனுக்கு முறையான பாதுகாப்புச் சேவைகளைத் வழங்கிவருவதாய் அவர் வலியுறுத்தினார்.

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்