Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

பேசுவோமா செய்தியில் மட்டும்

தந்தையின் தாலாட்டு

வாசிப்புநேரம் -
(மூத்த செய்தியாளர் ஜேஸ்ரீ)

அப்பா என்றால் வேலை, சம்பளம், கண்டிப்பு.
அம்மா என்றால் சமையலறை, உணவு, பாசம்.

இரவு பகல் பாராமல் உழைத்த தந்தை
பாசத்தை மட்டும் அள்ளிக்கொடுக்கும் தாய்
- இவை யாவும் பழைமையான கண்ணோட்டங்கள் இல்லையா?

இந்தப் போக்குகள் மாறி வெகுநாட்கள் ஆகிவிட்டன. இன்றைய உலகில் தந்தையரின் பாசம், பங்கு வேறுபட்டது.

father

நிலவைக் காட்டிச் சோறூட்டும் ஓவியங்களில் கூட தாயை வரைகிறோம் - பாவம், அப்பாக்கள் சோறூட்டுவதில்லையா?
இப்போது அவர்களும் சமைக்கிறார்களே!

பெற்றோர் பிள்ளைகளின் வாழ்க்கையில் பங்காற்றும் விதம் மாறிவிட்டது. வீட்டுச் சூழலில் ஆண்களின் பங்கு அதிகரித்திருக்கிறது, மாறுபட்டிருக்கிறது. பல காலமாகப் பெண்கள் செய்த வேலைகளில் ஆண்களும் ஈடுபடுகின்றனர். பிள்ளைகளுக்காக வேலையிடத்தில் நீக்குப்போக்கை விரும்புவோரில் தந்தையரும் அடங்குவர் என்பதை நாம் மறந்து விடுகிறோம். குறிப்பிட்ட தந்தை - தாய் 'வேலைகள்'  வேலிகளின்றி உருமாறியிருக்கின்றன. அதனால், குடும்ப இணைப்புகள் வலுபெறுகின்றன.

father

இளம் அப்பாக்கள் பிள்ளைகளிடம் நண்பர்களைப் போல இருக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள். 
'நான் எப்போது வேண்டுமானாலும் என் அப்பாவிடம் பேச முடியும்' என்ற எண்ணம் பல குடும்பங்களில் இன்றும் நிறைவேறவில்லை. 
இருப்பினும் இன்றைய தலைமுறைத் தந்தையர் இதற்காகவே போராடுகின்றனர். பிள்ளை வளர்ப்பதில் தந்தையருக்கும் பங்கு உண்டு என்பதை அவர்கள் நிரூபிக்கின்றனர். அவர்கள் பிள்ளைகளிடம் காட்டும் அக்கறை ஆழமாகியிருக்கிறது, வெளிப்படையாகியிருக்கிறது.

father

அவர்கள் வெளிக்காட்டும் பாசம் வேறுபட்டதாய் இருந்தாலும், அதைப் பற்றியும் பேசுவோமே.

தாய்க்காக எழுதும் கவிதைகளில் தந்தைக்கும் இடங்கொடுப்போமே.

அப்பாவின் தோள் மீது மகன் கைபோட்டு நடக்கும் காலம் வந்துவிட்டது.

மகளின் ஜடையைப் பின்னும் தந்தைகள் இப்போது ஏராளமாய் உள்ளனர்.

அவர்களில் நீங்களும் ஒருவரா?

உங்களுக்குத் தெரியுமே,
அந்தத் தாலாட்டு.

அன்புடன், 
ஜேஸ்ரீ

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்