Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

பேசுவோமா செய்தியில் மட்டும்

நொறுங்கிப் போன பின்பும் தலை நிமிர்ந்து நிற்கலாம் - Kintsugi கலை கற்றுக்கொடுத்த பாடம்

வாசிப்புநேரம் -
ஜப்பானில் தோன்றிய Kintsugi கலை இப்போது உலகெங்கும் மிகவும் பிரபலமாகிவிட்டது.

Kintsugi என்றால்?

சுக்குநூறாக நொறுங்கிய பாத்திரத்தைத் தங்கத்தை வைத்து இணைத்து அழகு பார்ப்பது.

சாதாரண வேலை தானே என்று நினைக்கலாம்!

ஆனால் பிரமிக்க வைக்கும் அளவிற்கு அதில் பல உள் அர்த்தங்கள்...

உடைந்த பொருள்களிலும் அழகு உண்டு என்பதை இந்தக் கலை உணர்த்துகிறது.

முதலில் உடைந்த பொருள்களைப் பழுதுபார்த்து சரிசெய்யலாமே என்னும் மனப்போக்கு உருவாகிறது.

இதனை வாழ்க்கையுடனும் ஒப்பிடலாம்!

எப்படி?

எந்தவொரு சிக்கலும் இல்லாமல் ஒருவர் வாழ்ந்திட முடியாது.

சிலருக்கு அவ்வப்போது வரும் சிக்கல்கள் சிலருக்கு அடிக்கடி வரக்கூடும்.

அப்போது மனம் தளராமல் எதிர்கொள்ளும் மனதிடத்தை ஏற்படுத்திக்கொள்வது அவசியம்.

Kintsugi கலை மூலம் இது தெள்ளத் தெளிவாக வலியுறுத்தப்படுகிறது!

இந்தக் கலையிலிருந்து நாம் என்னென்ன கற்றுக்கொள்ளலாம்?

•சிக்கல்கள் வரும்போது அவற்றை எப்படியாவது எதிர்நோக்கலாம் எனும் மன தைரியம்.

•சவால்களைச் சமாளித்து முன்னேற வேண்டும் என்ற மனப்பான்மை.

•பிறருடன் ஒப்பிடாமல் சுய வளர்ச்சியில் அதிகளவில் அக்கறை காட்டுவது அவசியம்.

•வாழ்க்கையில் நேர்ந்த கவலைக்குரிய நிகழ்வுகள் நிரந்தரமற்றவை எனும் உண்மை.

•பிரச்சினைகளை மறைக்கவோ மறுக்கவோ மறக்கவோ தேவையில்லை. எப்போதும் தலை நிமிர்ந்து நில் எனும் நினைவூட்டல்.

•தோல்வி, வேதனை, விரக்தி இவை அனைத்தும் நீர்க்குமிழி போன்றவை.

•மாற்றம் ஒன்றே மாறாதது.

வாழ்க்கை ஒரு வட்டம்....நொறுங்கிப் போன பின்பும் தலை நிமிர்ந்து நிற்கலாம் என்பதைக் காட்டுகிறது kintsugi.

இந்தக் கலையைச் செய்து பார்த்து பலவற்றைக் கற்றுக்கொண்டேன்.

இன்னும் கற்றுக்கொள்ளவேண்டியவை எண்ணிலடங்கா.

நல்லதே நினை..நல்லதே செய்...நல்லதே நடக்கும்..

செய்திக்காக,
மெலிசா மேனுயல்
ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்