பேசுவோமா செய்தியில் மட்டும்
எது திறமை?
வாசிப்புநேரம் -

(படம்: unsplash)
இது தான் வெற்றி, இது தான் தோல்வி, இது தான் திறமை, இது தான் அறிவு – இதை நாம் அன்றாடம் சந்திக்கும் சமூகமும், நம்மைச் சுற்றி இருப்பவர்களும் திரும்பத் திரும்பக் கூறி மனத்தில் பதிய வைக்கின்றனர்.
மருத்துவர், வழக்கறிஞர், பொறியாளர்கள் வாழ்க்கையில் வெற்றியாளர்கள்…
நிறையச் சம்பாதிப்பவர்கள் திறமையானவர்கள்….
உயர் பதவிகளில் இருப்பவர்கள் அறிவு நிறைந்தவர்கள்….
சமுதாயம் நமக்கு இதைத் தான் சொல்லிக் கொடுத்திருக்கிறது.
எனது வாதம் இவர்களெல்லாம் திறமைசாலிகள் இல்லை என்பதல்ல…
மற்ற திறமைகளைக் கவனிக்கத் தவறுகிறோம் என்பதே!
இது தான் திறமை என்று முடிவு செய்கிறோம். எட்டிவிட்டால் பூரிக்கிறோம். எட்ட முடியாவிட்டால் புலம்புகிறோம்.
அண்மையில் ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆலயத்தின் வழிபாட்டு நிகழ்வுக்குச் சென்றிருந்தேன். மிகப் பெரிய கலன் ஒன்றில் வைத்துப் பொங்கல் விநியோகம் செய்துகொண்டிருந்தார்கள். நானும் வாங்கிச் சாப்பிட்டேன். அப்படி ஒரு ருசி!
ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள்! 4 பேருக்குப் பொங்கல் தயாரிக்க, சரியான அளவு என்னவென்று 4 முறை YouTube காணொளியைப் பார்க்கிறோம்.
ஒரு சமையல் வல்லுநர் 1,000 பேருக்குச் சரியான உப்பு, மிளகு, பருப்புச் சேர்த்துப் பொங்கல் தயாரித்திருக்கிறார். அவரிடம் உள்ள திறமையை எத்தனைப் பேர் போற்றுகிறோம்? பாராட்டுகிறோம்?
ஒரு சொட்டு கீழே சிந்தாமல் உயரே தூக்கி தேநீர் ஆற்றுகிறாரே…அது கூடத் திறமை தான்!
ஒரு நிமிடத்தில் பிய்ந்துபோன செருப்பைப் புதிதுபோல் மாற்றிக் கொடுக்கிறாரே ஒருவர்….திறமை இல்லையா?
கறை நீக்கி ஓர் ஆடையைப் புதிதுபோல் சலவை செய்துகொடுப்பது திறமை இல்லையா?
ஒரு பூக்கூட உதிராமல் மாலை கட்டுவது திறமை இல்லையா?
சொல்லிக் கொண்டே போகலாம்.
ஆனால் இதில் கவனிக்க வேண்டியது….நாம் இதைக் கவனிக்கத் தவறுகிறோம் என்பதே.
அதிகப் பணம் சம்பாதிக்க வித்திடும் பணிகள் மட்டுமே பெரும்பாலும் திறமைகளாகப் பார்க்கப்படுகின்றன…இந்தச் சுழலுக்குள் சிக்கித் தவிக்கிறோம்.
எதைச் செய்தாலும் திறமையுடன் செய்யவேண்டும், முழுத் திறமையைக் காட்ட வேண்டும் – இதுதான் இலக்காக இருக்கவேண்டும்…இந்த எண்ணத்தை பிள்ளைகளிடமும் விதைக்கவேண்டும்.
அடுத்தவரிடம் உள்ள சின்னச் சின்னத் திறமைகளைக் கூடப் பாராட்டிப் பழகினால், நமக்குள் இருக்கும் சின்னச் சின்னத் திறமை கூட மகிழ்ச்சி அளிக்கும்.
‘எது திறமை?’ – நாம்தான் முடிவு செய்யவேண்டும், மற்றவர்கள் அல்ல.
சிந்திப்போம்! சந்திப்போம்!
அன்புடன்
மீனா ஆறுமுகம்