பேசுவோமா செய்தியில் மட்டும்
என் சமையல் அறையில்...
வாசிப்புநேரம் -

(படம்: Pixabay)
சமையல் ஒரு கலை... அதிலும் அளவோடு, உணவு விரயமாகாமல் சமைப்பது ஒரு தனிக் கலை.
முன்பெல்லாம் என் தாய்வீட்டில் குறைந்தது 10 பேருக்குச் சமையல். அம்மா, அப்பா, 8 பிள்ளைகள் என்பதால் சற்று அதிகமாகவே சமைக்கவேண்டும். இப்படித்தான் நான் சமையல் பழகினேன்.
திருமணமானதும், என் கணவரின் பாட்டி, சின்னம்மா என நால்வருக்குச் சமைத்தேன். பிள்ளைகள் பிறந்து தனிக்குடித்தனம் போனதும் 5 பேருக்குச் சமையல்.
பிள்ளைகள் வளர வளர, மூன்று வேளையும் வீட்டில் சாப்பிடும் போக்கு குறைந்தது. சில வேளைகளில் ஒருவர் மட்டுமே மதிய உணவு வேண்டும் என்பார். பெரும்பாலும் இரவில் மட்டுமே ஒன்றாகச் சாப்பிடுவோம்.
இன்னும் ஓராண்டில் மூத்த மகள் வேலைக்குச் சென்றுவிடுவார். ஓரிரு ஆண்டுகளில் மகனும் தேசிய சேவையைத் தொடங்குவார். கடைக்குட்டிப் பெண் பள்ளியிலேயே தங்கிப் பயில்வதால் வார இறுதியில் தான் வீடு திரும்புகிறார்.
முன்பைப்போல், நிறைய உணவு, மளிகைப் பொருள்களை வாங்கி வைத்துக்கொள்ள முடியாது. வாரத்தில் யார் எப்போது சாப்பிடுவார்கள் என்பதை முன்கூட்டியே கேட்டறியத் தொடங்கிவிட்டேன். அதன்படி ஒவ்வொரு நாளும் என்ன சமையல் என்பதைத் திட்டமிட்டு,அதற்குத் தேவைப்படும் பொருள்களை மட்டுமே பட்டியலிட்டு வாங்குகிறேன். 'பிறகு பயன்படுமே' என நினைத்து வாங்கும் போக்கு... இதைக் குறைத்துக்கொளவது எவ்வளவு கடினம் என்பது இப்போதுதான் தெரிகிறது.
முன்பெல்லாம் வீட்டில் வாங்கி சேமித்து வைத்திருக்கும் சமையல் பொருள்கள் சீக்கிரம் தீர்ந்துவிடும். இப்போதோ நிலை வேறு. ஏற்கனவே வாங்கிய உணவுப் பொருள்களை முதலில் பயன்படுத்தப் பார்க்கிறேன்.
பொருள்களின் இருப்பு, அவை காலாவதியாகும் தேதி - இவற்றையெல்லாம் நினைவில் வைத்துக்கொள்வது சுலபமல்ல. அதற்கு உதவும் சில செயலிகளையும் பயன்படுத்தப் போகிறேன். அடுத்த முறை கடைக்குச் செல்லும்போதோ, இணையத்தில் பொருள் வாங்கும்போதோ, அந்தச் செயலிகளைத் தட்டினால்போதும்... வீட்டிலுள்ள பொருள்களின் பட்டியலைப் பார்க்கலாம். ஒவ்வொரு நாளும், எந்தப் பொருள்கள் காலாவதியாகப் போகின்றன எனும் தகவலையும் செயலிகள் அனுப்பிவைக்கும்.
குளிர்பதனப் பெட்டியை முழுமையாகப் பயன்படுத்தவும் திட்டம் உள்ளது. ரொட்டி வகைகளை வெளியில் வைத்துத்தான் எனக்குப் பழக்கம். வெப்பத்தினால் சில வேளைகளில் அவை விரைவில் கெட்டுப்போய்விடுகின்றன. உறைய வைத்துப் பார்த்தேன்... 'toaster'ஐ பயன்படுத்தி வாட்டிச் சாப்பிடுகிறேன். பழங்களும் இப்போது சில்லெனக் குளிர்பதனப் பெட்டியில் இருக்கின்றன. பெட்டியின் முன் பக்கத்தில், விரைவில் காலாவதியாகும் தேதி உடைய உணவு. பின் பக்கத்தில் சமீபத்தில் வாங்கிய பொருள்கள் என அடுக்கத் தொடங்கிவிட்டேன்.
உணவுக் கழிவைக் குறைக்க என்னால் முடிந்தது. காலத்துக்கும் வாழ்க்கைக்கும் ஏற்றபடி முயற்சிகள் மாறும்...தொடரும்!
அன்புடன்,
லக்ஷ்மி ஜெய்காந்த்