பேசுவோமா செய்தியில் மட்டும்
இது தானே பெற்றவர்கள் பாசம்!
வாசிப்புநேரம் -

(படம்: unsplash)
பிடித்த வேலை கிடைக்க வேண்டும் என்பது பல இளைஞர்களின் கனவு.
அப்படிக் கிடைத்துவிட்டால் அவர்கள் அதிர்ஷ்டசாலிகள்.
அதை நானும் அனுபவிப்பேன் என்று கனவில்கூட நினைத்துப் பார்க்கவில்லை.
அதுவும் வெளிநாட்டில் கிடைக்கும்போது அந்த உணர்வை வார்த்தையால் சொல்லவே முடியாது.
வானளவு மகிழ்ச்சி மட்டுமா?ஒரு பக்கம் கவலையும் ஏற்பட்டது.
புதிய மனிதர்கள், புதிய தங்குமிடம், புதிய வேலையிடம், புதிய வாழ்க்கை முறை.
பிறந்து வளர்ந்த சூழலோ வேறு, செல்லும் புதிய நாட்டின் கலாசாராமோ சற்று மாறுபட்டது.
அதற்கும் மேல் குடும்பத்தைப் பிரிந்து வாழவேண்டும்.
'நினைத்ததைச் செய்வோம். நடப்பது எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம்' என்று பைகளைத் தூக்கிக்கொண்டு கிளம்பினேன்.
காரில் ஏறுவதற்கு முன் அம்மாவைக் கட்டி அணைத்து முத்தமிட்டேன்.
வயதுவந்த பெண்பிள்ளையை வெளிநாட்டிற்கு அனுப்புவதா என்ற பயத்துடன் அவர் கண்ணீர் மல்க என்னைப் பார்த்தார்.
மனம் மாறிவிடுவேனோ என்று பயந்துகொண்டே காரில் ஏறி வேகமாக உட்கார்ந்தேன்.
பயணம் முழுவதும் அப்பா ஆறுதலாக பேசிக்கொண்டு வந்தார்.
"எதுவாக இருந்தாலும் பார்த்துக்கொள்ளலாம்...பயப்படாதே! அப்பா இருக்கிறேன்" என்ற அவரின் வார்த்தை தைரியத்தைக் கொடுத்தது.
ஜொகூர் வரை கொண்டுவந்து விட்டுச் சென்றார் அப்பா.
ஜொகூர்- சிங்கப்பூர் எல்லையைத் தனியாகக் கடக்கும்போது பல யோசனைகள்.
ஒரு வழியாக சிங்கப்பூர் வந்தடைந்தவுடன் சுற்றிப் பார்த்தேன்.
அதிகமான சீனர்கள். பல வடிவில் கட்டடங்கள்.
கண்ணுக்கு எட்டிய தூரத்தில் குப்பைகளே இல்லை.
அனைத்து அறிவிப்புப் பலகைகளும் ஆங்கிலத்தில் இருந்தன.
இதனால்தான் சிங்கப்பூர் வளர்ச்சியடைந்த நாடுகளின் பட்டியலில் இருக்கிறது என்று மனதில் முணுமுணுத்துக்கொண்டேன்.
ரயில் சேவையைப் பயன்படுத்தி தங்குமிடத்திற்குச் சென்றேன்.
திடீரென்று...தமிழில் அறிவிப்பு
அடடா.. தமிழ்த் தாய் என்னை வாழ்த்தி வணக்கம் சொன்னது போல் இருந்தது.
வாடகை வீட்டைச் சென்றடைந்தவுடன் பொருள்களை என் அறையில் வைத்துவிட்டு சன்னல் வழியாக எட்டிப் பார்த்தேன்.
ஓர் அப்பா அம்மா தங்கள் குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
திடீரென்று அந்தக் குழந்தை அவர்களைத் தள்ளிவிட்டு ஓடியது.
உடனே அம்மா அந்தக் குழந்தையை விரட்டிப் பிடிக்க, அது பின்னால் திரும்பி பார்த்துச் சிரித்துக்கொண்டே வேகமாக ஓடியது.
திடீரென்று அவர்கள் மூவரையும் காணவில்லை.
என்ன நடந்தது என்ற ஆவல். ஆனால் பசித்தது...அதனால் உணவு வாங்கக் கீழே இறங்கினேன்.
அந்த அப்பா அம்மா பிள்ளை மூவரும் படிகளில் ஏறிக்கொண்டிருந்தார்கள்.
'கீழே விழுந்தால் என்ன ஆகும்' என்று அம்மா அந்த குழந்தையைப் அதட்ட, குழந்தையோ அப்பாவை இறுக்கமாகக் கட்டியணைத்துக் கொண்டது.
பிள்ளைகளுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயத்திலேயே அம்மாக்கள் வாழ்கிறார்கள்.
'பிடித்ததைச் செய், என்ன நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம்' என்ற எண்ணத்துடன் அப்பாக்கள் தைரியம் கொடுக்கிறார்கள்.
என்னுடைய அப்பா அம்மாவும் அப்படித்தானே என்று எண்ணி மனத்தினுள் சிரித்துக்கொண்டேன்.
ஊர் மாறலாம்...மொழி மாறலாம்...கலாசாரம் மாறலாம்...பெற்றோரின் பாசம் என்பது எல்லா இடங்களிலும் ஒன்றுதான் என்பது புரிந்தது. படிகளில் இறங்கினேன்.
கைத்தொலைப்பேசியில் அம்மாவின் குறுஞ்செய்தி "நீ பத்திரமாக சிங்கப்பூர் சென்று சேர்ந்துவிட்டாயா..பேசுவோமா?"
பேசுவோம்...
அன்புடன், பிரவினா புகழேந்தி