பேசுவோமா செய்தியில் மட்டும்
மௌனம்
வாசிப்புநேரம் -

pixabay
இந்தக் குறிப்பிட்ட பக்கத்தை என் சொற்களால் நிரப்பாமல் அப்படியே விட்டுவிட்டால் நான் என்ன சொல்லவருகிறேன் என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்?
அதேபோலதான் வாயிலிருந்து உதிரும் வார்த்தைகளும்...
அவ்வப்போது மனத்தில் பட்டதை சொல்லிவிடவேண்டும்...
இல்லாவிட்டால் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் எதிர்பார்ப்பு என்ன என்பது அடுத்தவர்களுக்குத் தெரிய வாய்ப்பே இல்லை.
சிலரைப் பார்த்திருக்கிறேன் ...
எதற்குமே மௌனம் தான்...
முகத்தில் கடுகைப் போட்டால் வெடித்துவிடும்...
அந்த அளவுக்குக் கோபம்.
'என் மீது கோபமா? எதுவாயிருந்தாலும் சொல்லிவிடுங்கள்' என்று காலைப் பிடித்து கெஞ்சினாலும்.......
வாயிலிருந்து எதுவுமே வந்துவிடாது.
நீண்ட நாள்களுக்கு அப்படி மௌனமாக இருப்பதைவிட முகத்தில் அறைந்தார்போல சொல்லிவிடுவதைத்தான் நான் விரும்புவேன்.
ஏனென்றால் பிரச்சினைக்கான தீர்வைக் காண அதுவே சிறந்த வழி என்பது என் வாதம்.
அமைதியாக இருந்துவிட்டால் விரிசலும் மனவலியும்தான் அதிகமாகும்.
பேசாமல் இருப்பதைவிட பேசிவிடுவது நல்லது.
ஒருவேளை கோபத்தில் ஓரிரு வார்த்தைகள் சுளீரென சுட்டுவிடும் என்ற பயம் இருந்தால் கோபம் சற்று தணிந்த பிறகு பேசலாமே!
அப்போது வரும் வார்த்தைகள் கொஞ்சம் ஞானத்தால் மெருகேற்றப்பட்டதாக வரலாம் அல்லவா?
எனக்குத் தெரிந்த பேச்சாளர் இப்படிச் சொல்வதுண்டு...
காலம் பொன் போன்றது அல்ல... உயிர் போன்றது...
பொன்னை இழந்தால் சம்பாதித்துக்கொள்ளலாம்.
உயிர் போனால், வரவே வராது...
அப்படித்தான் பேசவேண்டிய இடத்தில் மௌனமாக இருந்துவிட்டு பிறகு பேசியிருக்கலாமே என்று எண்ணுவது மடமை.
நான் நேரடியாகப் பார்த்ததைச் சொல்கிறேன்...
எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் ஏதோ ஒரு சிறு சச்சரவு காரணமாக மற்றொரு நண்பரிடம் பேசாமல் இருந்துவிட்டார்.
தெளிவாக இருக்கவேண்டும் என்பதற்காக அவர்களுக்குப் புனைப்பெயர் தருகிறேன்.
ரவி... சேகர்...
இருவரிடையே பிரச்சினை.
சேகர் எவ்வளவு மன்னிப்புக் கேட்டும் ரவி பேச மறுத்துவிட்டார்.
எது கேட்டாலும் மௌனம்தான்.
ஒரு வாரம் கழித்து அளவுக்கு மீறி நடந்துகொண்டுவிட்டோமோ என்று ரவி நினைத்தார்.
சேகரைத் தொலைபேசியில் அழைத்தார். சேகர் நிரந்தரமாக மௌனமானார்.
ஆம்! ரவி சேகரை அதற்குப்பின் பார்த்தது சவப்பெட்டியில்தான்.
விபத்து ஒன்றில் சேகர் காலமானார்.
அதன்பின் ரவி குற்றவுணர்ச்சியிலிருந்து மீண்டுவர பல ஆண்டுகள் ஆனது.
ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவரோ மாநிலத்தீர்...
யாருக்கு எதுவேண்டுமானாலும் எப்படி வேண்டுமேனாலும் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம்.
எனவே நெருக்கமானவர்கள், அன்புக்குரியவர்கள், உயிர்போன்றவர்களிடம் பேசாமல் இருந்துவிடக்கூடாது என்ற அறிவு எனக்குப் பிறந்தது.
தொடக்கத்தில் நானும் பிடித்தமானவர்களை ஏன் காயப்படுத்தவேண்டும் என்று பேசாமல் இருந்துவிடுவேன்.
சில சமயங்களில் அவர்களைக் காயப்படுத்த மௌனத்தையே ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தியதும் உண்டு.
அதற்கும் அத்தனை சக்தியா என்று ஆச்சரியப்பட்டதும் உண்டு.
மௌனம் ஒரு கலை.
எப்படிப் பயன்படுத்தவேண்டுமோ அப்படிப் பயன்படுத்தவேண்டும்.
ஆனால் சொல்வதில் நியாயம் இருந்தால், அதில் ஒரு நேர்மை இருந்தால், சொல்லிவிடவேண்டும்.
அதை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் அவரவர் விருப்பம்.
சொல்ல வந்ததைத் தெளிவாகவும் பதமாகவும் புரியும் வகையிலும் சொல்லிவிட்டால் மனமாவது கொஞ்சம் ஆறுதல் பெறும்.
சொல்லாமல் மட்டும் இருந்துவிடக்கூடாது.
ஒரு வேளை ரவி என்ன நினைக்கிறார் என்பதை சேகரிடம் சொல்லியிருந்தால் நிலைமை மாறியிருக்குமோ என்னவோ.
காலத்துக்குத்தான் வெளிச்சம்!

ஆதாரம் : Mediacorp Seithi