மூதுரை
சீரியர் கெட்டாலும் சீரியரே; சீரியர் மற்று
சீரியர் கெட்டாலும் சீரியரே; சீரியர் மற்று
அல்லாதார் கெட்டால் அங்கு என்னாகும்?-சீரிய
பொன்னின் குடம் உடைந்தால் பொன்னாகும்; என் ஆகும்
மண்ணின் குடம் உடைந்தக் கால்?
நல்லவரின் நிலை தாழ்ந்தாலும் நல்லவர் என்ற பெயர் இருக்கும். தீயவருக்கு என்ன இருக்கும்? தங்கக் குடம் உடைந்தாலும் தங்கத்தின் மதிப்புக் குறையாது. ஆனால் மண்குடம் உடைந்துவிட்டால் அதற்கு எந்த மதிப்பும் இருக்காது.
June 29, 2025