Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ரெட் சுவஸ்திகா பள்ளிச் சம்பவம் - 'நான் அந்த ஓட்டுநர் இல்லை'

வாசிப்புநேரம் -

ரெட் சுவஸ்திகா (Red Swastika) பள்ளியில் பாதுகாப்பு அதிகாரியைக் காரைக்கொண்டு தள்ளிய சம்பவத்திற்கும் தமக்கும் எந்தத் தொடர்பும் இல்லை நியோ டியாம் டிங் (Neo Tiam Ting) என்பவர் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 12ஆம் தேதி முதல் தமக்கும் அந்தச் சம்பவத்திற்கும் தொடர்பு இருப்பதாகப் பல WhatsApp குறுஞ்செய்திகளும் Facebook பதிவுகளும் குறிப்பிடுவதாக அவர் தமது Facebook பக்கத்தில் கூறினார்.

"எனக்கும் அந்தச் சம்பவத்திற்கும் தொடர்பில்லை என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். நான் அந்த ஓட்டுநர் இல்லை. அந்த வாகனமும் எனதில்லை."

என்று நியோ சொன்னார்.

சமூக ஊடகங்களில் பகிரப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் வேதனையளிப்பதாக அவர் பகிர்ந்தார்.

அவற்றுக்கு எதிராகக் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

அத்தகைய Facebook பதிவுகள் சில நீக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa