Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அனைத்துலக நீதிமன்ற வழக்கில் மியன்மாரின் சட்ட உயர் பிரதிநிதிப் பொறுப்பிலிருந்து மாற்றப்பட்ட ஆங் சான் சூச்சி

வாசிப்புநேரம் -
அனைத்துலக நீதிமன்ற வழக்கில் மியன்மாரின் சட்ட உயர் பிரதிநிதிப் பொறுப்பிலிருந்து மாற்றப்பட்ட ஆங் சான் சூச்சி

(படம்: AFP)

ரொஹிஞ்சாக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டது பற்றிய வழக்கில் அனைத்துலக நீதிமன்ற விசாரணையில் மியன்மாரின் சட்ட உயர் பிரதிநிதி பொறுப்பிலிருந்து திருவாட்டி ஆங் சான் சூச்சி (Aung San Suu Kyi) மாற்றப்பட்டுள்ளார். 

2019இல் திருவாட்டி சூச்சி அந்த விசாரணையில் மியன்மார் பிரதிநிதியாகப் பங்கேற்றார். 

அடுத்த மாதம் 21 ஆம் தேதி, அடுத்த சுற்று விசாரணை இடம்பெறவுள்ளது. 

அப்போது, சிறுபான்மை ரொஹிஞ்சாக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டுகளை மியன்மார் ராணுவ ஆட்சியாளர்கள் மறுப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

2017இல் நடந்த வன்முறைக்குப் பிறகு, 730 ஆயிரத்துக்கும் அதிகமான ரொஹிஞ்சாக்கள் பங்களாதேஷில் அடைக்கலம் புகுந்தனர். 

இனப்படுகொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலேயே மியன்மார் ராணுவம் செயல்பட்டதாக அமெரிக்கப் புலனாய்வுக்குழு கூறியிருந்தது.

-Reuters

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa