Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

Color Run ஓட்ட நிகழ்ச்சி: வண்ணத் தூள்களைப் பயன்படுத்துவதன் பாதுகாப்பு குறித்து ஆய்வு

சிங்கப்பூரில் நடைபெறவிருக்கும் Colour Run ஓட்ட நிகழ்ச்சிக்கு ஒப்புதல் அளிப்பதற்கு முன்னர், வண்ணத் தூள்களைப் பயன்படுத்துவதன் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. 

வாசிப்புநேரம் -
Color Run ஓட்ட நிகழ்ச்சி: வண்ணத் தூள்களைப் பயன்படுத்துவதன் பாதுகாப்பு குறித்து ஆய்வு

படம்: The Color Run Singapore/Facebook

வெளியீடு : 01 Jul 2015 09:47AM புதுப்பிப்பு : 01 Jul 2015 10:04AM

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் நடைபெறவிருக்கும் Color Run ஓட்ட நிகழ்ச்சிக்கு ஒப்புதல் அளிப்பதற்கு முன்னர், வண்ணத் தூள்களைப் பயன்படுத்துவதன் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. கடந்த வார இறுதியில், தைவானில், வண்ணத் தூள் பயன்படுத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியில், வெடிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. 

Color Run ஓட்ட நிகழ்ச்சிக்கான விண்ணப்பங்களைப் பெற்றிருப்பதாக, சிங்கப்பூர்ப் போலீஸ் படை தெரிவித்தது. போலீஸ் படையும், சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையும், தைவானில் நடந்த வெடிப்புச் சம்பவம் குறித்து ஆராய்ந்து வருகின்றன. Color Run நிகழ்ச்சியில், வண்ணத் தூள் பயன்படுத்தப்படவிருப்பது குறித்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடன் அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்